செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
dc76f932-ca08-45db-bb50-6f2cb565e604
-

மகாராஷ்டிரா: அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவு

மும்பை: பாலியல் துன்புறுத்தல்களைக் கண்டறிய மகாராஷ்டிரா வில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரி வித்துள்ளார். மகாராஷ்டிராவில் 65,000 பள்ளிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மாணவ, மாணவிகள், அங்கன்வாடி ஊழியர், மருத்துவர், முதல்வர் ஆகியோரை உள்ளடக்கிய 'சக்தி சாவித்திரி' என்ற குழுவை அமைக்க வேண்டும் என்றார்.

முதல் முறையாக எஃகு கழிவுகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சாலை

அகமதாபாத்: இந்தியாவிலேயே முதல் முறையாக எஃகு (ஸ்டீல்) கழிவுகளைக் கண்டு ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பயன்பாட்டுக்குப் பின் 1.9 கோடி டன் எஃகு கழிவுகள் குவிகின்றன. அவை பெரும்பாலும் வீணாகின்றன. இந்நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஹசிரா தொழிற்பேட்டையில் எஃகு கழிவுகளைக் கொண்டு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல டன் எடையை ஏற்றிச் சென்ற லாரிகளால் மோசமடைந்து இருந்த இந்தச் சாலை, எஃகு கழிவுகளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்ட பின்னர், முன்னைவிட அதிக எடை கொண்ட லாரிகள் பலமுறை கடந்து சென்ற பிறகும் பாதிப்படையாமல் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மோடி: நல்ல உடல்நலத்தைப் பெறுவதில் உலகை ஒன்றிணைக்கிறது யோகா

புதுடெல்லி: நல்ல உடல்நலத்தைப் பெறுவதில் உலகை ஒன்றிணைக்கிறது யோகா என பிரதமர் மோடி தெரிவித்துள் ளார். கத்தார் நாட்டுத் தலைநகர் தோஹாவில் 114 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது. அங்குள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தி ருந்த அந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இதையடுத்து, தூதரகத்தின் இந்த மகத்தான முயற்சியைப் பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பெண் எம்பிக்கள் எண்ணிக்கை குறைவு

புதுடெல்லி: இந்திய பெண்கள் மத்தியில் தேர்தலில் வாக்களிப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியுள்ளார். எனினும், நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமாகப் பணியாற்றிய எம்பிக்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.