எரிபொருள் உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மூன்று கட்டப் போராட்டம்

எரிபொருள் உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மூன்று கட்டப் போராட்டம்

2 mins read
cb26f232-b9c4-41e5-9d35-9ddb661946d8
-

புது­டெல்லி: எரி­பொ­ருள், விலை­வாசி உயர்­வைக் கண்­டித்து காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் மூன்று கட்டப் போராட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மார்ச் 31ஆம் தேதி நாடு தழு­விய அள­வில் முதற்­கட்­டப் போராட்­டம் நடை­பெ­றும் என்­றும் ஏப்­ரல் 2 முதல் 4ஆம் தேதி வரை நாடு முழு­வ­தும் மாவட்ட வாரி­யாக உண்­ணா­வி­ர­தம், கண்­டன முழக்­கங்­கள் எழுப்­பும் போராட்­டம் நடை­பெ­றும் என்­றும் அக்­கட்­சித் தலைமை கூறி­யுள்­ளது.

மேலும், ஏப்­ரல் 7ஆம் தேதி மாநிலத் தலை­ந­க­ரங்­களில் மட்­டும் போராட்­டம் நடை­பெ­றும் என­வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்­க­ளாக பெட்­ரோல், டீசல் விலை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக, கடந்த ஆறு நாள்­களில் மட்­டும் ஐந்து முறை பெட்­ரோல், டீசல் விலை உயர்ந்­துள்­ளது.

இதை­ய­டுத்து எதிர்க்­கட்­சி­கள் மத்­திய அரசை கடு­மை­யா­கச் சாடி வரு­கின்­றன. சாமா­னி­யர்­க­ளின் அன்­றாட வாழ்க்கை கேள்­விக்­குறி­யா­கி­விட்­ட­தாக காங்­கி­ரஸ் கட்சி தெரி­வித்­துள்­ளது.

அண்­மை­யில் நடை­பெற்ற ஐந்து மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் படு­தோல்வி கண்டுள்­ளது. இதை­ய­டுத்து, கட்­சித் தொண்­டர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யும் உற்­சாக­மும் ஊட்­டும் வித­மாக இந்தப் புதிய போராட்­டங்­களை அக்­கட்சித் தலைமை அறி­வித்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

நேற்று முன்­தி­னம் காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர்­கள், மாநிலப் பொறுப்­பா­ளர்­க­ளின் கூட்­டம் டெல்லி­யில் நடை­பெற்­றது. அப்­போது மூன்று கட்­டப் போராட்­டங்­களை முன்­னெ­டுப்­பது என முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அக்­கட்­சி­யின் தலை­மைச் செய்­தித் தொடர்­பா­ளர் ரன்­தீப் சுர்­ஜி­வாலா தெரி­வித்­தார்.

"வரும் 31ஆம் தேதி நடை­பெற உள்ள முதற்­கட்­டப் போராட்­டத்­தின்­போது காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் தங்­கள் வீட்­டின் முன்­பா­க­வும் பொது இடங்­க­ளி­லும் விலை­வாசி உயர்வை எடுத்­து­ரைக்­கும் வித­மாக சமை­யல் எரி­வாயு உரு­ளை­க­ளுக்கு மாலை அணி­வித்து, மேள­மும் மணி­யும் அடிப்­பார்­கள்.

"அடுத்து ஏப்­ரல் 2 முதல் 4ஆம் தேதி வரை காங்­கி­ரஸ் கட்சி, தொண்டு அமைப்­பு­கள், மத, சமூக அமைப்­பு­கள், குடி­யி­ருப்­போர் நலச்­சங்க நிர்­வா­கி­க­ளு­டன் சேர்ந்து நாடு முழு­வ­தும் மாவட்ட அள­வில் மறி­யல் போராட்­டங்­களும் பேர­ணி­களும் நடை­பெ­றும்.

"ஏப்­ரல் 7ஆம் தேதி மாநில தலை­ந­க­ரங்­க­ளி­லும் தொண்டு அமைப்­பு­கள், மத, சமூக அமைப்­பு­க­ளு­டன் இணைந்து காங்­கி­ர­சார் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வர்," என்­றார் ரன்­தீப் சுர்­ஜி­வாலா.