மேற்கு வங்க வன்முறை: 22 பேர் மீது வழக்கு

மேற்கு வங்க வன்முறை: 22 பேர் மீது வழக்கு

2 mins read
90d4a529-634b-4415-82c6-fc93c19514e4
-

கோல்கத்தா: மேற்கு வங்­கத்­தில் எட்டு பேர் எரித்­துக் கொல்­லப்­பட்ட வழக்கு தொடர்­பான விசா­ர­ணையை சிபிஐ தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது. இது­வரை 22 பேர் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

பிர்­பூம் மாவட்­டத்­தில் நிகழ்ந்த வன்­மு­றை­யின்­போது போக்­டூய் கிரா­மத்­தில் வீடு­க­ளுக்­குத் தீ வைக்­கப்­பட்­டது. இதில், இரண்டு குழந்­தை­கள் உள்­பட எண்­மர் தீயில் கருகி உயி­ரி­ழந்­த­னர்.

இது­கு­றித்து அம்­மா­நில சிறப்­புப் புல­னாய்­வுப் பிரிவு விசா­ரணை மேற்­கொண்­டது. முதற்­கட்­ட­மாக பத்து பேர் மீது வழக்­குப்­ப­திவு செய்து, ஆளும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யின் உள்­ளூர் தலை­வர் ஒரு­வரை கைது செய்­தது சிறப்­புப் புல­னாய்­வுப் பிரிவு.

எனி­னும் இந்த வழக்கை சிபி­ஐ­யி­டம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோல்­கத்தா உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. இதை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் சிபிஐ அதி­கா­ரி­கள் குழு வன்­முறை நிகழ்ந்த கிரா­மத்­துக்கு நேரில் சென்று விசா­ரணை மேற்­கொண்­டது. அதன் முடி­வில் 22 பேர் மீது அது வழக்­குப் பதிவு செய்தது.

ஏற்­கெ­னவே கைது செய்­யப்­பட்­டுள்ள அப்­ப­குதி திரி­ணா­முல் காங்­கி­ரஸ் பிர­மு­கர் அன­ருல் ஹச­னி­டம் சிபிஐ அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­தி­னர். இந்த வழக்­கில் அவர்­தான் முக்­கிய குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­ப­டு­கி­றார்.

இதற்­கி­டையே, மேற்கு வங்­கத்­தில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­­ப­வ­மா­னது ஒரு சதித்­திட்­டம் என்­று கூறியுள்ளார்.

இதற்­கி­டையே, பிர்­பூம் வன்­மு­றைச் சம்­ப­வம் தொடர்­பாக மேற்கு வங்க சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று ஆளும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் எதிர்க்­கட்­சி­க­ளுக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது.

ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவை­யில் தொடர்ந்து அமளி நில­விய நிலை­யில், பாஜக உறுப்­பி­னர்­கள் ஐந்து பேர் அவை நட­வ­டிக்­கை­களில் இருந்து இடை­நீக்­கம் செய்­யப்­ப­டு­வ­தாக சபா­நா­ய­கர் அறி­வித்­தார். இதற்கு அம்மாநில பாஜக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.