வேலை நிறுத்தப் போராட்டம்: முடங்கிய மாநிலங்கள்

வேலை நிறுத்தப் போராட்டம்: முடங்கிய மாநிலங்கள்

2 mins read
615307ed-f6c4-45b1-9081-011274cb1fea
நேற்று நாடு தழுவிய அளவில் நடைபெற்ற தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தங்களுடைய 14 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.கோல்கத்தாவில் இந்திய வர்த்தக தொழிற் சங்கத்தினரும் வங்கி ஊழியர்களும் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.படம்: இபிஏ -

மத்திய அரசைக் கண்டித்து 220 மில்லியன் தொழிலாளர்கள் பங்கேற்றதாகத் தகவல்

புது­டெல்லி: மத்­திய அர­சைக் கண்­டித்து தொழிற்­சங்­கங்­கள் நேற்­றுத் தொடங்­கிய இரண்டு நாள் பொது வேலை­நி­றுத்­தப் போராட்­டம் கார­ண­மாக நாட்­டின் பல்­வேறு மாநி­லங்­களில் பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது.

பொதுப் போக்­கு­வ­ரத்து, வங்­கிப் பணி­கள் பாதிக்­கப்­பட்­டன. சில மாநி­லங்­களில் கடை­கள், உண­வ­கங்­கள், திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்­டி­ருந்­தன.

மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்­கான 18 மாத அக­வி­லைப்­படி நிலு­வையை உடனே வழங்க வேண்­டும், பொதுத் துறை வங்­கி­களை தனி­யார்­ம­ய­மாக்­கக்­கூ­டாது என்­பன உள்­ளிட்ட 14 அம்ச கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி மத்­திய அரசு ஊழி­யர்­கள் நேற்­றும் இன்­றும் நாடு­த­ழு­விய பொது வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். குறிப்­பாக எதிர்க்­கட்சி ஆளும் மாநி­லங்­களில் வேலை நிறுத்­தம் நடந்து வரு­கிறது.

இதில் பல்­வேறு தொழிற்­சங்­கங்­கள் பங்­கேற்­றுள்­ளன. மொத்­தம் 200 மில்­லி­யன் தொழி­லா­ளர்­கள் இதில் பங்­கேற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மத்­திய, மாநில அரசு ஊழி­யர்­க­ளின் அகில இந்­திய அமைப்­பு­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், வங்கி உள்­ளிட்ட பொதுத் துறை நிறு­வ­னங்­கள் சார்ந்த தொழிற்­சங்­கங்­கள் போராட்­டத்­­தில் பங்­கேற்­றுள்­ளன.

சில மாநி­லங்­களில் நேற்று ரயில் மறி­யல், கண்­டன முழக்­கங்­கள் எழுப்­பும் போராட்­டங்­களில் தொழி­லா­ளர்­கள் பங்­கேற்­ற­னர். மேற்­கு ­வங்­கம், கேரளா உள்­ளிட்ட சில மாநி­லங்­களில் கடை­கள், வணிக நிறு­வ­னங்­கள் அடைக்­கப்­பட்­டன.

கேர­ளா­வில் அனைத்து பள்­ளி­க­ளுக்­கும் இரண்டு நாள்­க­ளுக்கு விடு­முறை விடப்­பட்­டுள்­ளது.

இப்­போ­ராட்­டத்­தில் பங்­கேற்க மத்­திய, மாநில அர­சு­கள் தடை விதித்த போதி­லும், தொழி­லா­ளர்­கள் அதை கண்­டு­கொள்­ள­வில்லை.

தொழிற்­சங்­கங்­க­ளின் வேலை நிறுத்­தத்­தால் மக்­கள் பாதிக்­கப்­ப­டாத வகை­யில் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு மாநில அர­சு­களை மத்­திய அரசு கேட்­டுக்­கொண்டு உள்­ளது.

மக்­க­ளுக்கு 24 மணி நேர­மும் தடை­யற்ற மின்­சா­ரம் கிடைப்­பதை உறுதி செய்ய வேண்­டும் என மின்சார அமைச்­சுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டது.

குறிப்­பாக, மருத்­து­வ­மனை, ரயில்வே, ராணு­வம் போன்ற அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளுக்கு மின்­சா­ரம் தடை­யின்றிக் கிடைப்­பதை உறுதி செய்ய வேண்­டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இந்த வேலை நிறுத்­தப் போராட்­டம் கார­ண­மாக சட்­டம் ஒழுங்கு பாதிக்­கப்­பட்­டு­வி­டக் கூடாது என்­பதை உறுதி செய்ய ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் ஆயி­ரக்­க­ணக்­கான காவல்­து­றை­யி­னர் நேற்று தீவிர சுற்­றுக்­கா­வல், கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.

இதற்­கி­டையே, இன்­றும் தொழிற்­சங்­கங்­களின் போராட்­டம் நீடிக்­கிறது.