மோடியை சீன அமைச்சர் சந்திக்க அனுமதி மறுப்பு

மோடியை சீன அமைச்சர் சந்திக்க அனுமதி மறுப்பு

1 mins read
9423df2e-19c8-410a-9338-704aba6a2b1f
-

புது­டெல்லி: அண்­மை­யில் இந்­தி­யா­வுக்கு வருகை மேற்­கொண்ட சீன வெளி­யு­றவு அமைச்­சர் வாங் யீ, பிர­த­மர் மோடி­யைச் சந்­திக்க விரும்­பி­ய­தா­க­வும் மத்­திய அரசு அவ­ரது கோரிக்­கையை ஏற்­க­வில்லை என்­றும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தனது அதி­கா­ர­பூர்வ பய­ணத்தை முடித்­துக்­கொண்டு இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­விட்­டார் சீன வெளி­யு­றவு அமைச்­சர்.

கல்­வான் பகு­தி­யில் இரு­த­ரப்பு ராணு­வ­மும் மோதிக்­கொண்ட நிகழ்­வுக்­குப் பிறகு சீன வெளி­யு­றவு அமைச்­சர் ஒரு­வர் இந்­தி­யா­வுக்கு வருகை மேற்­கொள்­வது இதுவே முதல் முறை.

புது­டெல்­லி­யில் இந்­திய வெளி­ய­றவு அமைச்­சர் ஜெய்­சங்­க­ரை­யும் பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவ­லை­யும் சந்­தித்­துப் பேசி­னார் வாங் யீ.

அதன் பின்­னர் அவர் பிர­த­மர் மோடி­யைச் சந்­திக்க விரும்­பு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

எனி­னும், இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான எல்­லைப் பிரச்­சினைக்கு இன்­னும் தீர்வு காணப்­படாத நிலை­யில், சீன அமைச்­ச­ரின் கோரிக்­கையை மத்­திய அரசு ஏற்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

உத்­த­ரப் பிர­தேச மாநில முதல்­வ­ராக யோகி ஆதித்­ய­நாத் இரண்­டா­வது முறை­யா­கப் பத­வி­யேற்­கும் நிகழ்­வில் பங்­கேற்­கச் சென்­று­விட்­ட­தால் பிர­த­ம­ரைச் சந்­திக்க இய­லாது என மத்­திய அரசு தரப்பு சீன அமைச்­ச­ரி­டம் கார­ணம் கூறி­ய­தா­க­வும் அந்த ஊட­கச் செய்தி மேலும் தெரி­விக்­கிறது.

இதை­ய­டுத்து, இரு­த­ரப்பு உறவு இன்­னும் வழக்க நிலைக்குத் திரும்­ப­வில்லை என்­பது தெளி­வா­கத் தெரி­வ­தாக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.