பீகார் முதல்வர் கன்னத்தில் அறைந்த இளையர் கைது

பீகார் முதல்வர் கன்னத்தில் அறைந்த இளையர் கைது

1 mins read
821d7091-a3d1-437b-893e-f567aac9bfb7
-

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை இளையர் ஒருவர் பொது இடத்தில் வைத்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் கைதானார்.

நேற்று முன்தினம் பக்தியார்பூர்தான் பகுதிக்குச் சென்ற முதல்வர் நிதிஷ்குமார் அங்கு தனது இளமைக்கால நண்பர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், அங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவருக்கு சில அடிதூரம் பின்னால் நின்றிருந்த இளையர் ஒருவர் திடீரென நிதிஷ்குமாரை நோக்கிப் பாய்ந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் முதல்வரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைய, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளையரைப் பாய்ந்து பிடித்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

காவல்துறையினர் பின்னர் அந்த இளையரிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து மாநில அதிகாரிகள் தகவல் எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். எனினும், அந்த இளையர் யார், அவர் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.