சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

1 mins read
fd89472c-cdcf-481e-98c6-c87beb8236f7
-

புது­டெல்லி: பங்­குச்­சந்தை முறை­கேடு வழக்­கில் சிக்­கி­யுள்ள சித்ரா ராம­கி­ருஷ்­ணா­வின் நீதி­மன்­றக் காவல் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், அவ­ரது கையெ­ழுத்து மாதி­ரி­க­ளைக் கேட்டு சிபிஐ தாக்­கல் செய்த விண்­ணப்­பத்­தின் மீது நீதி­மன்­றம் விரை­வில் உத்­த­ரவு பிறப்­பிக்க இருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பங்­குச்­சந்­தை­யின் ரக­சிய தக­வல்­களை இம­ய­ம­லை­யில் இருக்­கும் சாமி­யார் ஒரு­வ­ரி­டம் சித்ரா ராம­கி­ருஷ்ணா பகிர்ந்­த­தாக புகார் எழுந்­துள்­ளது.

தேசிய பங்­குச் சந்­தை­யின் மேலாண் இயக்­கு­ந­ரா­க­வும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யா­க­வும் பொறுப்­பில் இருந்­த­வர் சித்ரா ராம­கி­ருஷ்ணா.

தனது பத­விக்­கா­லத்­தில் தேசிய பங்­குச்­சந்­தை­யில் பணி நிய­ம­னம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பதவி இட­மாற்­றம் உள்­ளிட்ட விவ­கா­ரங்­களில் அவர் விதி­மு­றை­களை மீறிச் செயல்­பட்­ட­தாக புகார் எழுந்­தது.

இதை­ய­டுத்து நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில் அவர் முறை­கேட்­டில் ஈடு­பட்­டது உறு­தி­யா­னதை அடுத்து, மூன்று கோடி ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், சிபிஐ அவ­ரைக் கைது செய்­தது. தற்­போது அவ­ரது நீதி­மன்­றக் காவல் ஏப்­ரல் 11ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.