லக்னோ: உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் சுனில் சவுகானும் வில்வித்தை வீரர் நீரஜ் சவுகானும் சகோதரர்கள். இவர்கள் சாலையோரத்தில் காய்கறிகள் விற்று தங்களது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனர்.
இக்காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நல நிதியின்கீழ் இருவருக்கும் ரூ.5 லட்சம் உதவி நிதியை விளையாட்டு அமைச்சு வழங்கியது.
ஒருசமயத்தில் காலணிகள், உடைகள் என எதுவும் வாங்க முடியாமல் ஏழ்மைப் பிடியில் சிக்கித் தவித்த நீரஜ் சவுகான், 19, தனது கனவை கைவிட்டு விடாமல் தொடர்ந்து பயிற்சி யில் ஈடுபட்டு வந்தார்.
ஹரியானாவின் சோனி பட்டில் உள்ள இந்திய விளை யாட்டு மையத்தில் நடைபெற்ற பயிற்சிகளில் சிறந்த முறையில் திறனை வெளிப்படுத்திய இவர், வில்வித்தை உலகக் கோப்பை, உலக விளையாட்டு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதிக்க உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

