தெருவோரம் வசித்த 20,000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு

தெருவோரம் வசித்த 20,000 குழந்தைகளுக்கு மறுவாழ்வு

1 mins read
63cd0e17-6bfb-4172-a679-588ed5219521
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தெரு­வில் வசிக்­கும் 20,000 குழந்­தை­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு, அவர்­களுக்கு மறு­வாழ்வு அளிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக குழந்­தை­க­ளைப் பாது­காக்­கும் என்­சி­பி­சி­ஆர் என்ற அமைப்­பின் தலை­வர் பிரி­யங்க் கனூங்கோ தெரி­வித்­துள்­ளார்.

அவர் பிடிஐ செய்தி நிறு­வ­னத்­துக்கு அளித்துள்ள நேர்காணலில், "தெரு­வோ­ரக் குழந்­தை­க­ள் நலனுக் காகவே 'பால் ஸ்வ­ராஜ்' என்ற சமூக வலைத்தளத்தை மத்திய அர­சு ஏற்படுத்தி உள்ளது. இத்தளத்தில் குழந்தைகள் பற்றிய தக­வல்­க­ளைப் பதி­வேற்றம் செய்ய லாம்; கண்­கா­ணிக்­க­லாம்; அவர்­களது மறு­வாழ்­வுக்­கான பணி­களையும் செய்­ய­லாம்.

"இது­வரை சாலை­யோ­ரம் வசித்த 20,000 குழந்­தை­க­ளுக்கு மறு­வாழ்வு அளிக்­கப்­பட்­டுள்ளது.

"இருப்பினும், பாதிக்கப்பட்ட குழந்­தை­க­ளைக் கண்­ட­றிந்து மறு­வாழ்வு தரு­வ­தில் மாநி­லங்­கள் திறம்­படச் செயல்­ப­ட­வில்லை," என வும் கனூங்கோ குற்றம்சாட்டினார்.

குறிப்­பாக, டெல்­லி­யில் 1,800 குழந்­தை­கள் மட்­டுமே மீட்கப்பட் டுள்ளனர் என்­றும் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு 73,000 குழந்­தை­கள் டெல்லி தெருக்­களில் வசிப்­ப­தாக தங்­க­ளி­டம் கூறப்­பட்­டதாகவும் கனூங்கோ கூறி­யுள்­ளார்.

கிரா­மங்­கள், சிற்றூர்களில் இருந்­து ரயில் மூலம் பல குழந்­தை­கள் வீட்­டை­விட்டு ஓடி வந்து பெரு நக­ரங்­களை வந்­த­டை­கின்­ற­னர். மும்பை, கோல்­கத்தா, டெல்லி, சென்னை, கான்­பூர், ஹைத­ரா­பாத், பெங்­க­ளூரு போன்ற பெரிய நக­ரங்­களில் தெரு­வில் வசிக்­கும் குழந்­தை­கள் அதி­க­மா­கக் காணப்­படு­கி­றார்­கள்.