செந்தோசா தனது 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மூத்த தலைமுறையினருக்காகச் சிறப்புச் சலுகைகளை வழங்கவிருக்கின்றது. 60 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் இவற்றுக்குத் தகுதி பெறுவர்.
விளையாட்டு, உணவு, தங்குமிடம் என மூன்று பிரிவுகளிலும் பலவகை சலுகைகளைச் செந்தோசா வழங்குகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை (பொது விடுமுறைகளைத் தவிர்த்து) காலை 10 மணி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 2 மணி, மாலை 4 மணிக்கு குளிர்சாதன வசதியுடனான 2 மணி நேர சுற்றுலா...
www.sentosa.com.sg/silversdeal இணையப்பக்கத்தில் நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது மவுண்ட் ஃபேபர் பீக், ஹார்பர்ஃப்ரண்ட் டவர் 2 நிலையம், செந்தோசா நிலையம், மெர்லையன் நிலையம், இம்பியா லூக்அவுட் நிலையம், சிலோசோ பாய்ண்ட் நிலையம் ஆகிய ஆறு மவுண்ட் ஃபேபர் லெஷர் முகவைகளில் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கேபிள் கார், செந்தோசா தீவு பேருந்து சுற்றுலா உள்ளடங்கிய பயணத்தை வெறும் $5 செலவில் மூத்தோர் மேற்கொள்ளலாம். இரண்டு மணி நேரப் பேருந்து சுற்றுலாவில் அமர்ந்தபடியே செந்தோசாவின் பிரதான கண்கவர் இடங்களை அவர்கள் கண்டு களிக்கலாம்.
ஃபோர்ட் சிலோசோ, ரிசார்ட்ஸ் வொர்ல்ட் செந்தோசா முதலியவற்றுக்கு இப்பயணம் அழைத்துச் செல்லும். மூத்தோர் மட்டுமின்றி, அவர்களுடன் பயணிக்கும் குடும்ப உறுப்பினர்களும் பேருந்து சுற்றுலாப் பயண நுழைவுச் சீட்டுகளில் 50% கழிவுகளைப் பெறுவர். $60 மதிப்புள்ள இச்சுற்றுலாப் பயணம் ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே.
50 விழுக்காடு வரையிலான கழிவுகளும் செந்தோசாவின் பல்வேறு கண்கவர் இடங்களுக்கு மூத்தோருக்காக வழங்கப்படுகின்றன.
உலகப் பிரபலங்களை செந்தோசா மேடம் டுஸாட்ஸ் மெழுகுக் காட்சியகத்தில் குறைந்த விலையில் மூத்தோர் காணலாம். ஒரு நுழைவுச்சீட்டின் விலைக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகள் மூத்தோருக்கு வழங்கப்படும். இந்நுழைவுச்சீட்டு, உட்புற படகுச் சவாரிக்கும் 4டி மார்வெல் யூனிவர்ஸ் அனுபவத்துக்கும் மூத்தோரை அனுமதிக்கும்.
கண்ணைப் பறிக்கும் செந்தோசாவின் 4டி அட்வெஞ்சர்லாண்ட் பயணத்தையும் மூத்தோர் பாதி விலைக்குக் காணலாம். நான்கு அதிநவீனப் பயணங்கள் இதில் அடங்கும்.
செந்தோசாவின் உலகத்தர உணவு விடுதிகளிலும் மூத்தோருக்கான சிறப்புச் சலுகைகள் காத்திருக்கின்றன. டிரபிசா, வோக் 15 கிட்சென் உணவகங்கள் முறையே 20 மற்றும் 10 விழுக்காட்டுக் கழிவுகளை அளிக்கின்றன. வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளாமலேயே, குறைந்த விலையில் உலகளாவிய பதார்த்தங்களை மூத்தோர் செந்தோசாவில் உண்ணலாம். மூத்தோரும் அவர்களது அன்புக்குரியோரும் செந்தோசாவின் கேளிக்கை நிகழ்வுகளில் கலந்துகொண்டு மகிழ்வதற்கான வசதிகளைச் செந்தோசா அமைத்துத் தர முயன்றுள்ளது.
மேல் விவரங்களுக்கு
www.sentosa.com.sg/silversdeal இணையத்தளத்தை நாடலாம்.
இந்தத் தகவலை உங்களுக்கு வழங்குவது:
ஆசிய கண்டத்தின் தெற்கு பகுதியானது செந்தோசாவின் பலவான் கடற்கரை. கடல் காற்றையும் தென்சீனக் கடல் காட்சியையும் ரசிக்கலாம்.
11 மாடி உயரத்தில் நடந்து கண்கொள்ளா காட்சியைக் கண்டு ரசிக்கலாம். இயற்கையும் வரலாறும் சந்திக்கும் காட்சியும் உண்டு.
செந்தோசா நிலையத்திலிருந்து 2 மணி நேர, குளிர்சாதன வசதியுள்ள சிற்றுந்தில் ஏறி ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசா உள்ளிட்ட ஐந்து இடங்களைச் சுற்றிவரலாம்.

