காஷ்மீரில் சொத்து வாங்கிய 34 வெளி மாநிலத்தவர்கள்

காஷ்மீரில் சொத்து வாங்கிய 34 வெளி மாநிலத்தவர்கள்

1 mins read
8299384d-6c49-4584-8e78-7982517a9c35
-

ஸ்ரீந­கர் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் 370வது­ பி­ரிவு நீக்­கப்­பட்ட பின்­னர் ஜம்மு, காஷ்­மீ­ரில் வெளி­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த 34 பேர் சொத்­து­கள் வாங்­கி­யுள்­ள­தாக மத்­திய உள்­துறை இணை­ய­மைச்­சர் நித்­யா­னந்த் ராய் தெரி­வித்­துள்­ளார்.

ஜம்மு, காஷ்­மீர் யூனி­யன்­பி­ர­தேச நிர்­வா­கம் இத்­த­க­வலை வெளி­யிட்­டுள்­ளது என்­றும், ஜம்மு, ரியாசி, உதம்­பூர், கந்­தர்­பால் மாவட்­டங்­களில் வெளி மாநி­லத்­த­வர்­கள் சொத்­து­கள் வாங்கி உள்­ள­தா­க­வும் அவர் மக்­க­ள­வை­யில் எழுப்­பப்­பட்ட ஒரு கேள்­விக்கு எழுத்து மூலம் தாக்­கல் செய்த பதி­லில் குறிப்­பிட்­டுள்­ளார்.

காஷ்­மீ­ருக்கு அளிக்­கப்­பட்டு வந்த சிறப்­புத் தகுதி கடந்த 2019ஆம் ஆண்டு நீக்­கப்­பட்­டதை அடுத்து, அம்­மா­நி­லம் ஜம்மு-காஷ்­மீர், லடாக் என இரண்டு யூனி­யன் பிர­தே­சங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டன. பின்­னர் அங்கு நிலக் கொள்­மு­தல் சட்­டங்­கள் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதன்­படி வெளி­மாநிலத்­தைச் சேர்ந்­த­வர்­களும் அங்கு சொத்­து­களை வாங்க முடி­யும்.