மூன்று மாநில தேர்தல்: காங்கிரசுக்கு நெருக்கடி தரும் ஆம் ஆத்மி

மூன்று மாநில தேர்தல்: காங்கிரசுக்கு நெருக்கடி தரும் ஆம் ஆத்மி

2 mins read
58755f2b-2da3-493a-9665-0781a7a7d617
-

இரு மாநிலங்களைக் குறிவைக்கும் ஆம்ஆத்மி: காங்கிரசுடன் இணையும் கனுகோலு

புது­டெல்லி: விரை­வில் நடை­பெற உள்ள மூன்று மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் ஒரு மாநி­லத்­தி­லா­வது வெற்றி பெற்­றாக வேண்­டும் என்ற முனைப்­பு­டன் காங்­கிரஸ் கட்­சித் தலைமை வியூ­கங்­களை அமைத்து வரு­கிறது. இந்­நி­லை­யில், ஆம் ஆத்மி கட்சி இரண்டு மாநி­லங்­க­ளைக் குறி­வைத்­துள்­ளது.

அடுத்த சில மாதங்­களில் கர்­நா­டகா, குஜ­ராத், இமாச்­ச­லப் பிரதே­சம் ஆகிய மூன்று மாநி­லங்­களில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. பிர­த­மர் மோடி­யின் சொந்த மாநி­லம் என்­ப­தால் குஜ­ராத்­தில் எப்­ப­டி­யும் வெற்றி உறுதி என பாஜக தலைமை நம்­பிக்­கை­யோடு உள்­ளது.

பஞ்­சாப் மாநி­லத்­தில் பெரும் வெற்­றி­யைப் பதிவு செய்து, இந்­திய அர­சி­யல் களத்­தில் ஆச்­ச­ரிய அலை­களை ஏற்­ப­டுத்தி உள்ள ஆம் ஆத்மி, அடுத்து இமாச்­சல பிர­தே­சம், குஜ­ராத் ஆகிய இரு மாநி­லங்­க­ளைக் குறி வைத்­துள்­ள­தாக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், ஆம் ஆத்­மி­யின் வளர்ச்­சியை தடுத்­தால் மட்­டுமே தேசிய அர­சி­ய­லில் வலு­வான சக்தியாக நீடிக்க முடி­யும் என்ற நிலையில், காங்­கி­ரஸ் கட்­சித் தலைமை தீவிர ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்டுள்­ளது.

காங்­கி­ரஸ் மாநி­லத் தலை­வர்­களை தொடர்­பு­கொண்டு கட்­சி­யின் அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்து விவா­தித்து வரும் ராகுல் காந்தி, தேர்­தல் நடை­பெற உள்ள மூன்று மாநி­லங்­க­ளுக்கு தொடர்ந்து பய­ணம் மேற்­கொள்ள முடிவு செய்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி எத்­த­கைய நிலைப்­பாட்டை எடுப்­பார் என்­பது முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது.

"நாட்­டில் உள்ள அனைத்து முற்­போக்கு சக்­தி­களும் ஒன்­றி­ணைந்து ஒடுக்­கு­முறை சக்­திக்கு எதி­ராக போராட வேண்­டி­யது காலத்­தின் கட்­டா­யம். அதனை முன்­னெ­டுக்க வேண்­டும்," என்று எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளுக்கு மீண்­டும் அழைப்பு விடுத்­துள்­ளார் மம்தா.

இது தொடர்­பாக, பாஜக அல்­லாத மாநில முதல்­வர்­க­ளுக்கு அவர் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

முதல்­வர் மம்­தா­வு­டன் இணைந்து செயல்­பட முன்­வந்­தா­லும், எதிர்க்­கட்­சிக் கூட்­ட­ணி­யா­னது காங்­கி­ரஸ் கட்சி தலை­மை­யில்­தான் அமைய வேண்­டும் என்­பதில் சோனி­யா­வும் ராகு­லும் உறுதி­யாக உள்­ள­னர். ஆனால் மம்தா தரப்பு இதை ஏற்­குமா என்­பது தெரி­ய­வில்லை.

இதற்­கி­டையே, எதிர்­வ­ரும் 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேர்­தல் வியூக ஆலோ­ச­க­ராக கனு­கோலு பணி­யாற்ற உள்­ள­தா­கத் தெரி­கிறது. இவர் பிர­பல தேர்­தல் வியூக ஆலோ­ச­கர் பிர­சாந்த் கிஷோ­ரின் நண்­ப­ரா­வார்.