பெட்டக அறையில் சிக்கியவர் 18 மணி நேரத்துக்கு பின் மீட்பு

பெட்டக அறையில் சிக்கியவர் 18 மணி நேரத்துக்கு பின் மீட்பு

1 mins read
ae86f34f-adc6-4f4c-8578-50f43bcb1b3d
-

ஹைத­ரா­பாத்: வங்­கிப் பாது­காப்பு பெட்­டக அறை­யில் வைத்து பூட்­டப்­பட்ட 84 வயது முதி­ய­வர் 18 மணி நேரத்­துக்­குப் பின்­னர் காவல்­து­றை­யால் மீட்­கப்­பட்­டார்.

ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த வியா­பா­ரி­யான கிருஷ்ணா ரெட்டி, சில முக்­கிய ஆவ­ணங்­களை தனது பாது­காப்­புப் பெட்­ட­கத்­தில் வைப்­ப­தற்­காக ஜூப்ளி ஹில்ஸ் பகு­தி­யில் உள்ள வங்­கிக் கிளைக்கு நேற்று முன்­தி­னம் சென்­றி­ருந்­தார்.

வங்கி ஊழி­யர் ஒரு­வர் அவரை பெட்­டக அறைக்கு அழைத்­துச் சென்று, வெளி­யில் காத்­தி­ருந்­தார். பிறகு ஏதோ கவ­னக்­கு­றை­வாக முதி­ய­வர் பெட்­டக அறை­யில் இருப்­பதை மறந்து அவர் மற்ற பணி­களை கவ­னிக்­கச் சென்­று­விட்­டார்.

அன்று மாலை வங்கி ஊழி­யர்­கள் அனை­வ­ரும் சென்­ற­தும், பெட்­டக அறை­யும் வங்­கி­யும் பூட்­டப்­பட்­டன. இதை அறி­யாத முதி­ய­வர் கிருஷ்ணா ரெட்டி, வங்கி ஊழி­யர் வரு­வார் எனக் காத்­துக்­கி­டந்­துள்­ளார்.

அன்று அவர் கைபேசி கொண்டு வர­வும் மறந்­து­விட்­ட­தால், உதவி செய்­வார் யாரு­மின்றி காற்­றோட்­ட­மில்­லாத பெட்­டக அறை­யில், தவிக்க நேரிட்­டது.

அவ­ரைக் காணா­மல் குடும்­பத்­தார் காவல்­து­றை­யில் புகார் அளிக்க, வங்­கிக்கு விரைந்து வந்து அங்­குள்ள கண்­கா­ணிப்பு கேம­ராக்­களில் பதி­வான காட்­சி­களை காவல் ஆய்­வா­ளர் பார்­வை­யிட்­டார். அதில் முதி­ய­வர் வங்­கிக்கு வந்­தது மட்­டுமே பதி­வாகி இருந்­தது.

எனவே அவர், வங்­கிக்­குள்­தான் இருப்­பார் என்று முடிவு செய்து, பாது­காப்புப் பெட்­டக அறையை திறந்து பார்த்­த­போது, அங்கு கிருஷ்ணா ரெட்டி மயங்­கிய நிலை­யில் காணப்­பட்­டார். பின்­னர் அவ­ருக்கு முத­லு­தவி சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.