தேர்வை புறக்கணித்த மாணவிகள்
பெங்களூரு: ஹிஜாப் விவகாரம் காரணமாக கர்நாடகாவில் சுமார் 21,000 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை எனத் தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் மார்ச் 28ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுத ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் ஆசிரியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஹிஜாப்பை கழற்றினால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று கூறப்பட்டதால், பல மாணவிகள் தேர்வைப் புறக்கணித்து வீடு திரும்பினர். கர்நாடகாவில் இந்த ஆண்டு 869,399 மாணவர்கள் தேர்வு எழுத அடையாள அட்டை வழங்கப்பட்டு இருந்தது.
திருச்சூர் கோவிலுக்கு தங்க யானை
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள திருச்சூர் கோவிலுக்கு பக்தர் ஒருவர் ரூ.1 கோடியும் தங்கத்தால் செய்யப்பட்ட யானை சிலையையும் காணிக்கையாக வழங்கி உள்ளார். எனினும் அவர் தமது பெயர் விவரங்களை வெளியிடவில்லை. அந்த தங்க யானை 800 கிராம் தங்கத்தைக் கொண்டு செதுக்கப் பட்டுள்ளது.
விமானக் கட்டணம் அதிகரிப்பு
புதுடெல்லி: விமானக் கட்டணங்கள் திடீரென அதிகரித்துள்ள தாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கண் காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப் பிட்ட சில வழித்தடங்களில் எவ்வளவு கட்டணம் விதிக்கப்படு கிறது என்பதை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கண்காணிப்பதாகவும் இதன் மூலம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
பெட்ரோல் விலை: அமைச்சர் விளக்கம்
புதுடெல்லி: கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல், உக்ரேன் போர் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண் ணெய் விலை கடந்த இரு வாரங்களாக உயர்ந்துள்ளது என்றும் அதன் காரணமாக கடந்த 8 நாள்களாக பெட்ரோல், விலை அதிகரித்துள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

