தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வட்டாரப் பாதுகாப்பு முக்கியம்: மோடி வலியுறுத்து

2 mins read
7363fe40-ded1-4c43-a62a-fdbd4a8e6c67
-

புது­டெல்லி: ஐரோப்­பா­வில் ஏற்­பட்ட அண்­மைய சில நிகழ்­வு­க­ளால் அனைத்­து­லக நிலைத்­தன்மை என்­பது கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது என்று பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

தற்­போ­தைய சூழ­லில் வட்­டா­ரப் பாது­காப்­புக்கு முக்­கி­யத்­து­வம் அளிப்­பது முன்­னு­ரிமை பெறு­கிறது என்று 'பிம்ஸ்­டெக்' உச்ச நிலை மாநாட்­டில் பங்­கேற்­றுப் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தியா, இலங்கை, பங்ளா தேஷ், மியன்மார், தாய்­லாந்து, நேப்­பா­ளம், பூடான் ஆகிய நாடு­களை உள்­ள­டக்­கிய 'பிம்ஸ்­டெக்' அமைப்­பின் பொரு­ளா­தார, தொழில்­நுட்ப மாநாடு நேற்று இலங்­கை­யில் நடை­பெற்­றது.

இதில் காணொளி வசதி மூலம் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார் பிர­த­மர் மோடி.

அப்­போது, அந்த அமைப்­பின் இலக்­கு­களை எட்­டு­வ­தற்கு உறுப்பு நாடு­கள் அனைத்­தும் ஒருங்­கி­ணைந்­துச் செயல்­பட வேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"ஐரோப்­பா­வில் அண்­மை­யில் நிகழ்ந்த சில நிகழ்­வு­கள் உல­க­ளவில் நிலைத்­தன்மை குறித்த கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளன. எனவே, 'பிம்ஸ்­டெக்' அமைப்­பா­னது வட்­டார ரீதி­யி­லான ஒத்­து­ழைப்பை மேலும் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. மேலும், வட்­டா­ரப் பாது­காப்பு என்­ப­தும் தற்­போது முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது.

"நாம் சுகா­தார, பொரு­ளி­யல் பாது­காப்பு தொடர்­பான பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளோம். எனவே, இப்­போது நமக்­குள் ஒற்­று­மை­யும் ஒத்­து­ழைப்­பும் இருப்­ப­து­தான் மிக அவ­சி­யம்.

"வங்­காள விரி­குடா என்­பது இணைப்பு, செழிப்பு, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்­கான பால­மாக உருப்­பெற வேண்­டும்," என்­றார் பிர­த­மர் மோடி.

அனைத்­து­லக மக்­கள் தொகை­யில் 21.7 விழுக்­காடு 'பிம்ஸ்­டெக்' உறுப்பு நாடு­க­ளின் பங்­க­ளிப்பு என்று குறிப்­பிட்ட அவர், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி விகி­தத்­தைப் பொருத்­த­வரை, 3.8 டிரில்­லி­யன் மதிப்பு கொண்­ட­தாக 'பிம்ஸ்­டெக்' அமைப்பு உள்­ளது என்­றார்.

எனவே, உல­கப் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்­குத் தேவைப்­படும் உந்து­சக்­தியை வழங்­கும் ஆதிக்­க­முள்ள அமைப்­பாக அந்த அமைப்பு உரு­வெ­டுத்­துள்­ளது என்­றும் பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டார்.

"கடந்த 1997ஆம் ஆண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சாதித்தது போல், நம்முன் உள்ள இலக்குகளை எட்ட உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்," என்றார் மோடி.