ஆர்யன் கான் வழக்கின் முக்கிய சாட்சி திடீர் மரணம்

ஆர்யன் கான் வழக்கின் முக்கிய சாட்சி திடீர் மரணம்

2 mins read
3e8f1db7-1c08-4acf-8436-b7777e9602f0
-

மும்பை: போதைப் பொருள் தொடர்­பாக இந்தி நடி­கர் ஷாரூக்­ கான் மகன் ஆர்­யன் கான் மீது வழக்­குப் பதி­வாகி உள்ள நிலை­யில், அதில் புல­னாய்வு முகமை தரப்பு சாட்சி மார­டைப்­பால் கால­மா­னார்.

36 வய­தான பிர­பா­கர் சைல் என்ற அந்த ஆட­வர் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று தன் வீட்­டில் கால­மா­ன­தாக தேசிய போதைப்­பொ­ருள் தடுப்பு ஆணை­யம்­ தெ­ரி­வித்­தது.

இந்த வழக்­கில் இருந்து ஆர்­யன் கானை விடு­விப்­பது தொடர்­பாக ரூ.25 கோடி லஞ்­ச­மாக பட்­டு­வாடா செய்­யப்­ப­டு­வது குறித்த உரை­யாடலை பிர­பா­கர் சைல் இடை­மறித்­துக் கேட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

அதில் எட்டு கோடி ரூபாய் தொகை­யா­னது இந்த வழக்கை தொடக்­கத்­தில் விசா­ரித்த அதிகா­ரியான சமீர் வான்­க­டே­வுக்கு தரப்­பட இருந்­த­தாக தக­வல் வெளி­யா­னது.

இதை­ய­டுத்து அவர் பணி­யிட மாற்­றம் செய்­யப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், பிர­பா­கர் சைல் திடீர் மார­டைப்­பால் கால­மா­ன­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போதைப்­பொ­ருள் வழக்­கில் கைதான ஆர்­யன் கான், சில வாரங்­கள் சிறை­யில் கழித்த பிறகே பிணை­யில் வெளி­வந்­தார்.

இதற்கிடையே, பிரபாகர் சைல் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அவர் மும்பையில் உள்ள செம்பூர் மாஹுல் பகுதியில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

"உடனடியாக அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் முன்பே இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்று காவல்துறை தெரிவித்ததாக மும்பை ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் ஆர்யன் கான் மீதான வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது.