அம்பானியை பின்னுக்குத் தள்ளிய கௌதம் அதானி

புது­டெல்லி: உலக பணக்­கா­ரர்­கள் தர­வ­ரி­சை­யில் சுமார் ரூ.7 லட்­சத்து 60,000 கோடி (100 பில்­லி­யன் டாலர்) சொத்து மதிப்­பு­டன் ஆசி­யா­வின் மிகப்பெரிய பணக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் புதிய வர­வாக கௌதம் அதானி சேர்ந்­துள்­ளார்.

அதானி குழு­மத்­தின் தலை­வ­ரான கௌதம் அதானி, சுமார் ரூ.7 லட்­சம் கோடி சொத்து மதிப்­பு­டன் ஆசி­யா­வின் பணக்­கா­ர­ராக இடம்­பெற்­றுள்­ளார். உல­கின் முதல் 10 பணக்­கா­ரர்­கள் தர­வ­ரி­சை­யில் உள்ள எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் போன்­றோர்­க­ளின் வரி­சை­யில் கௌதம் அதானி 10 ஆவது இடத்தை பிடித்­துள்­ளார். ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் தலை­வர் அம்­பானி 11 ஆவது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளார்.

ப்ளூம்­பெர்க் பில்­லி­ய­னர்ஸ் இன்­டெக்ஸ் படி, கௌதம் அதானி­ நூறு பில்­லி­யன் டாலருக்கும் அதிகமான சொத்துகளைக் கொண்டுள்ள இந்­தி­யா­வைச் சேர்ந்த தொழி­ல­தி­ப­ராக உள்­ளார்.

டெஸ்­லா­வின் எலான் மஸ்க் 273 பில்­லி­யன் டாலர் சொத்து மதிப்­பு­டன் உல­கின் மிகப்பெரிய செல்வந்தராகத் தொடர்­கி­றார், அமே­சான் நிறு­வ­னத் தலை­வர் ஜெஃப் பெஸோஸ் 188 பில்­லி­யன் டாலர் சொத்து மதிப்­பு­டன் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளார்.

2021 பிப்­ர­வரி மாதம் ஆசி­யா­வி­லேயே பணக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் முகேஷ் அம்­பானி மற்­றும் கௌதம் அதானி இரு­வ­ரும் மார்க் ஜூக்­கர்­பெர்க்கை பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.

கௌதம் அதானி கடந்த ஆண்­டில் மட்­டும் தனது நிகர சொத்து மதிப்­பில் 23.5 பில்­லி­யன் டாலர்­களை சேர்த்­துள்­ளார். அதே நேரத்­தில், அம்­பானி, 90 பில்லியன் டாலர் மதிப்புக்கும் குறைவான சொத்தைக் கொண்டுள்ளார்.

59 வய­தான அதானி குழு­மத்­தின் தலை­வ­ரான கௌதம் அதானி, சுரங்­கங்­கள், இயற்கை எரி­வாயு, துறை­மு­கங்­கள் உள்­ளிட்ட தொழில்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்.

தற்­போது ஆசி­யா­வின் மிகப் பெரிய செல்வந்தராக இருந்து வரும் அம்­பானி, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் மற்­றும் உல­கின் மிகப்­பெரிய எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு வளா­கத்­தின் உரி­மை­யா­ள­ரா­க­வும் உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!