கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் புதுமணத் தம்பதியினர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் தவறி விழுந்தனர். இதில் மணமகன் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தார்.
திருமணத்திற்குப் பிறகு கோழிக்கோட்டில் உள்ள குட்டியாடி ஆற்றோரமாக தம்பதியினர் தங்களை விதவிதமாகப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் பாறை மீது ஏறி நின்று கொண்டிருந்த அவர்கள் தவறி ஆற்றில் விழுந்தனர். மண மகன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மணமகளை உள்ளூர்காரர்கள் சிலர் உயிரோடு மீட்டனர். காயம் அடைந்த மணமகள் மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
உயிரிழந்த மாப்பிள்ளை ரஜின் லால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கு வயது 28. கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு தங்களை விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியதால் சில குடும்ப உறுப் பினர்களுடன் தம்பதியர் குட்டியாடி ஆற்றுக்கு வந்துள்ளனர்.
ஆபத்து நிறைந்த பகுதியில் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது கால் இடறி இருவரும் ஆற்றில் விழுந்தனர்.
விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

