கோயில் சன்னலில் சிக்கிக்கொண்ட திருடன்

கோயில் சன்னலில் சிக்கிக்கொண்ட திருடன்

1 mins read
b819b36c-fa39-4c94-9cfa-83683c1ba2c5
சன்னலில் திருடன் சிக்கிக் கொண்டதைக் காட்டும் படங்கள். படம்: இந்திய ஊடகம் -

திருப்­பதி: ஆந்­தி­ரா­வில் திரு­டப்­போன இடத்­தில் சன்­ன­லில் திரு­டன் சிக்­கிக்கொண்ட சம்­ப­வம் பலரை அதிர்ச்சி அடைய வைத்து உள்­ளது.

ஸ்ரீகா­கு­ளம் ஜாடு­பு­டி­யில் உள்ள பிர­சித்தி பெற்ற எல்­லை­யம்­மன் கோயி­லில் ஆண்­டு­தோ­றும் மார்ச் மாதங்­களில் திரு­விழா நடை­பெ­று­வது வழக்­கம்.

இதே போன்று இவ்­வாண்­டும் விழா மிகச்சிறப்­பாக நடை­பெற்­றது. ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் விழா­வில் பங்­கேற்று தங்­கம், வெள்ளி, பணம் ஆகி­ய­வற்றை கோயில் உண்­டி­ய­லில் காணிக்­கை­யாக செலுத்­தி­னர்.

இதை­ய­றிந்து செவ்­வாய் இரவு கோவி­லுக்கு வந்த கொள்­ளை­யன் கோயில் சன்­னல் கம்­பி­களை நீக்கி உள்ளே புகுந்­துள்­ளான்.

கரு­வ­றை­யில் இருந்த அம்­மன் தங்க வெள்ளி நகை­கள் மற்­றும் உண்­டி­யலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்­டிக் கொண்டு சன்­னல் வழியாக வெளியேற அவன் முயற்சி செய்­துள்­ளான்.

ஆனால் அவ­ரால் வெளியே வர முடி­யா­மல் சன்­னல் துவா­ரத்­தில் சிக்­கிக்கொண்­டார். நீண்ட நேரம் போராடி களைப்­பில் அவர் அப்படியே தூங்­கி­ விட்­டார்.

இந்த நிலை­யில் நேற்று காலை கோயி­லுக்கு வந்த பக்­தர்­கள், சன்­னல் துவா­ரத்­தில் சிக்­கி­யி­ருந்த திரு­டனைக் கண்டு அதிர்ச்சி அடைந்­த­னர்.

அருகில் இருந்தவர்கள் திருடனை மீட்க முயற்சி செய்து தோல்வியடைந்தனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், திருடனை மீட்டு காவல் நிலையத் துக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.