பெங்களூரு: மின்னஞ்சல் வழி விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பெங்களூரில் உள்ள ஏழு பள்ளிகளில் நேற்று காலை பதற்றம் நிலவியது.
இதையடுத்து, அனைத்து மாணவர்களும் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏழு பள்ளிகளுக்கும் நேற்று காலை சுமார் 11 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டலுடன் கூடிய மின்னஞ்சல் ஒன்று வந்தது.
"இந்த மிரட்டல் வெறும் நகைச்சுவை அல்ல. உடனடியாக காவல்துறையை அழைக்கவும். இல்லையெனில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படுவர்," என்று அந்த மின்னஞ்சலில் மிரட்டல் வரிகள் காணப்பட்டன. தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களும் அப்பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தினர். எனினும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.