லண்டன்: இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும் பிரிட்டன் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்சதா மூர்த்தி இங்கிலாந்து ராணி எலிசபெத்தைவிட பணக்காரராக திகழ்கிறார்.
2021 சண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ஏறத்தாழ
460 மில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தனது தந்தை நாராயணமூர்த்தி தொடங்கிய தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸில் 42 வயதான அக்சதா மூர்த்தியின் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
இதைத் தவிர, லண்டனின் கென்சிங்டனில் உள்ள
9 மில்லியன் டாலர் மதிப்புடைய வீடு, கலிஃபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு பிளாட் உட்பட குறைந்தது நான்கு சொத்துகளை வைத்துள்ளார்.
2010ல் ஃபேஷன் லேபிலான அக்சதா டிசைன்ஸை அக்சதா மூர்த்தி உருவாக்கினார்.
வரி செலுத்துவது தொடர்பில் அவர் இங்கிலாந்தில் குடியேறப்படாதவராக கருதப்படுவதால், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு தாம் பிரிட்டனில் வரி செலுத்த வேண்டியதில்லை என்பதை அக்சதா அண்மையில் தெளிவு படுத்தினார்.

