பஞ்சாப்பில் புத்தாண்டு, அறுவடைத் திருநாளான பைசாகி ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாள் கிட்டத்தட்ட தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளைப் போன்றதுதான். இந்த நாளில் பஞ்சாப் மாநிலத்தின் உழவர்கள் புனித நதிகளில் நீராடி, தாங்கள் அறுவடை செய்த பொன் நிற கோதுமையை இறைவனுக்குச் சமர்ப்பித்து, இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி கூறி, உற்றார் உறவினருடன் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பார்கள். பைசாகி தினத்தை முன்னிட்டு அமிர்தசரசில் கோதுமை விளைந்துள்ள வயலில் பாரம்பரிய 'பாங்கரா' நடனமாடி கொண்டாடிய சீக்கியர்கள்.
படம்: ஏஎஃப்பி

