புதுச்சேரி: புதுச்சேரியில் வசிக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள், பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் நேற்று வாக்களித்தனர்.
இரு கட்டங்களாக நடைபெறும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், அந்நாட்டின் தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் வசிக்கும் ஏறத்தாழ 4,564 பிரெஞ்சு குடிமக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி பிரெஞ்சு துணை தூதரகத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும் காரைக்காலின் அலாயன்ஸ் பிரெஞ்சில் உள்ள வாக்குச்சாவடியிலும் இந்த மக்கள் வாக்களிக்க பிரெஞ்சு தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

