சமய யாத்திரையில் கல்வீச்சு; கர்நாடக நகரமொன்றில் ஊரடங்கு

சமய யாத்திரையில் கல்வீச்சு; கர்நாடக நகரமொன்றில் ஊரடங்கு

1 mins read
88eb7ae0-6a8a-441f-8942-08f287323769
கல்வீச்சு தொடர்பில் முதல்கட்­ட­மாக காவல்துறையினர் ஐவரைக் கைது செய்துள்ளனர். படம்: இணையம் -

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லம் கோலார் மாவட்­டத்­தில் உள்ள முல்­பா­க­லில் ராம நவ­மியை முன்­னிட்டு வெள்­ளிக்­கி­ழமை இரவு யாத்­திரை நடை­பெற்­றது.

யாத்­திரை ஜஹாங்­கீர் மொஹல்லா பகுதி அருகே சென்­ற­போது ​​மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­டது. இதைத் தொடர்ந்து மர்ம நபர்­கள் சிலை மீது கற்­களை வீசித் தாக்­கி­ய­தில் 10க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.

இதைத் ­தொ­டர்ந்து ஏற்­பட்ட மோத­லில் சாலை­யில் சென்ற 2 கார்­கள், 5 இரு சக்­கர வாக­னங்கள் தாக்­கப்­பட்­டன. இத­னால் பெரும் பதற்­றம் ஏற்­பட்­ட­தால் காவல்­து­றை­யி­னர் தடி­யடி நடத்தி கூட்­டத்­தைக் கலைத்­த­னர். எனவே, முல்­பா­க­லில் நேற்று மாலை வரை ஊர­டங்கு உத்­த­ரவு நடப்­பில் இருந்­தது.

இது­கு­றித்து வழக்­குப்­ப­திவு செய்­துள்ள முல்­பா­கல் காவல்துறை யினர் கண்காணிப்புக் கேமரா காட்சி­க­ளைக் கொண்டு குற்­ற­வாளி­களைத் தேடி­வ­ரு­கின்­ற­னர்.