அகமதாபாத்: கொரோனா பெருந்தொற்று நம்மை விட்டு நீங்கவில்லை என தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி, அவை வெவ்வேறு திரிபுகளாக மீண்டும் பரவுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி, குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன தின விழாவில் காணொளி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு சொன்னார்.
"கொரோனா பெருந்தொற்று ஒரு நெருக்கடி என்றும் அந்த நெருக்கடியான சூழல் இன்னும் முடிவடைந்துவிடவில்லை.
"தற்போதைய நிலையில் கிருமிப் பரவல் குறைந்துள்ளதுபோல் தோன்றினாலும் அவை எப்போது மீண்டும் பரவும் என தெரியாது," என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
எனவே, மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோய்த் தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

