'மாயாவதியை முதல்வராக்க காங்கிரஸ் தயாராக இருந்தது'

'மாயாவதியை முதல்வராக்க காங்கிரஸ் தயாராக இருந்தது'

1 mins read
5b7a0b2e-0130-4dcc-8682-366ba1240edd
-

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில், மாயா­வ­தியை முதல்வா் வேட்­பா­ள­ராக அறி­விக்க தயா­ராக இருந்­த­தாக காங்­கி­ரஸ் கட்­சி­யின் ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

புது­டெல்­லி­யில் 'தி தலித் ட்ரூத்' என்ற புத்­த­கத்தை வெளி­யிட்டு அவா், "இன்­றைக்கு அர­சி­யல் தலை­வா்­க­ளைக் கட்­டுப்­படுத்த உளவு மென்­பொ­ருள் பயன்­படுத்­தப்­ப­டு­வ­தால் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டம் அதன் அா்த்தத்தை இழந்­து­விட்­டது.

"உத்­த­ரப் பிர­தேச சட்­டமன்றத் தோ்தலின்­போது காங்­கி­ர­சு­டன் கூட்­டணி அமைத்து முதல்­வ­ராகு­மாறு மாயா­வ­திக்கு நாங்­கள் ஆலோ­சனை கூறி­னோம். ஆனால், அவா் எங்­க­ளு­டன் பேசக் கூட மறுத்­து­விட்டாா்.

"சிபிஐ, அம­லாக்­கத் துறை, பெகா­ஸஸ் மென்­பொ­ருள் ஆகி­ய­வற்­றின் நெருக்­க­டிக்கு அஞ்சி, பாஜக ஆட்­சி­ய­மைக்­கத் தெளி­வான பாதையை மாயா­வதி ஏற்­ப­டுத்­திக் கொடுத்­து­விட்டாா்," என்றார். இன்­றைக்கு அர­சி­யல் முறையை சிபி­ஐ­யும் அம­லாக்­கத் துறை­யும் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன என்றும் அவர் சொன்னார்.