ஆந்திர அமைச்சரானார் ரோஜா

ஆந்திர அமைச்சரானார் ரோஜா

2 mins read
0a361e68-8d26-4f69-8705-7f04ce32713b
-

அம­ரா­வதி: ஆந்­தி­ரா­வில் 25 பேர் கொண்ட புதிய அமைச்­சர்­கள் நேற்று பத­வி­யேற்­ற­னர். இதில், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ரோஜா (படம்) முதன்­மு­றை­யாக அமைச்­ச­ராகப் பத­வி­யேற்­றார். அமைச்­ச­ரவை மாற்­றம் செய்­யப்­பட்­டதை எதிர்த்து ஆந்­தி­ரா­வின் பல்­வேறு இடங்­களில் போராட்­டங்­கள் நடந்து வரு­கின்­றன.

ஆந்­தி­ரா­வில் முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி கடந்த 2019ஆம் ஆண்­டில் முதல்­வ­ராகப் பதவி ஏற்ற பின்­னர், அப்­போது ஜெகன் அமைச்­ச­ர­வை­யில் 25 பேர் அமைச்­சர்­க­ளாகப் பத­வி­யேற்­ற­னர். ஆனால், வெறும் இரண்­டரை ஆண்­டு­கள் மட்­டுமே இந்த அமைச்­சர்­கள் பதவி வகிப்­பர் என்­றும், அதன் பின்­னர் புதி­ய­வர்­க­ளுக்கு மீத­முள்ள இரண்­டரை ஆண்­டு­கள் வாய்ப்பு வழங்­கப்­ப­டு­மெ­ன­வும் அறி­விக்­கப்­பட்­டது.

இப்­போது கிட்­டத்­தட்ட மூன்று ஆண்­டு­கள் நெருங்­கு­வ­தால், புதிய அமைச்­ச­ர­வையை நிய­ம­னம் செய்ய முதல்­வர் ஜெகன் தீர்­மா­னித்­தார். அதன்­படி, அனைத்து அமைச்­சர்­களும் தங்­க­ளது பத­வி­களில் இருந்து வில­கி­னர். இத­னைத் தொடர்ந்து, இது­வரை சிறப்­பா­கப் பணி­யாற்­றிய மற்­றும் மூத்த அமைச்­சர்­கள் பட்­டி­யல் முத­லில் தயா­ரிக்­கப்­பட்­டது. அதன் பின்­னர், புதி­தாக யாருக்கு வாய்ப்பு வழங்­க­லாம் என ஆலோ­சிக்­கப்­பட்­டது.

அதன்­படி, தற்­போது பழைய அமைச்­சர்­கள் பட்­டி­ய­லில் இருந்து 10 பேரும், புதி­தாக 15 பேரும் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

பழைய அமைச்­சர்­களில் ஆதி மூலபு சுரேஷ், பெத்­தி­ரெட்டி ராம சந்­திரா ரெட்டி, நாரா­ய­ண­சாமி, பி. சத்­ய­நா­ரா­யணா, ஜெய­ராம், அம்­பாட்டி ராம்­பாபு, ராஜேந்­தி­ர­நாத் ரெட்டி, விஸ்­வ­ரூப், அப்­பல ராஜு, வேணு­கோ­பால கிருஷ்ணா, அம்­ஜத் பாஷா ஆகியோருக்கு மீண்­டும் வாய்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அமைச்­சர்­களில் நகரி தொகுதி எம்­எல்­ஏ­வும், நடி­கை­யு­மான ஆர்.கே. ரோஜா­வுக்கு வாய்ப்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் அவர் முதன்­முறை ஆந்­திர அமைச்­ச­ர­வை­யில் இடம் பெறு­கி­றார்.

நேற்று காலை 11.30 மணிக்கு தலை­மைச் செய­லக வளா­கத்­தில் ஆளு­நர் விஸ்­வ­பூ­ஷண் ஹரி­சந்­தன் புதிய அமைச்­சர்­க­ளுக்குப் பதவி பிர­மா­ணம் செய்து வைத்தார்.