பெங்களூரு: பெங்களூரில் நான்கு நாள்களுக்கு மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று அந்நகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு அல்சூரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் இன்று பல்லக்கு உற்சவம் நடைபெறவுள்ளது. அதனையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் அல்சூர் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு நாள்களுக்கும், முத்தியாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி கமர்சியல் தெரு, புலிகேசிநகர், சிவாஜிநகர், டி.ஜே.ஹள்ளி ஆகிய பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

