அகமதாபாத்: நாடு முழுவதும் நேற்று முன்தினம் ராமநவமி தினம் கொண்டாடப்பட்டது. இதில் மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தில் 10 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் ஹிம்மத்நகர், ஆனந்த் மாவட்டம், கம்பாட் நகர் ஆகிய இடங்களிலும் இந்து மத ஊர்வலத்தின் போது இரண்டு பிரிவினர் மோதிக்கொண்டனர். காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா, ஷிப்பூர், கர்கோனிக் பகுதியிலும் ஜார்கண்ட் மாநிலத்தின் லோகர் டகாவிலும் கலவரம் மூண்டது.

