புதிய வகை கொரோனா கிருமி: கண்காணிப்பு தீவிரம்

புதிய வகை கொரோனா கிருமி: கண்காணிப்பு தீவிரம்

2 mins read
4fbb04e5-8521-4e21-9359-006d9cf57521
-

புது­டெல்லி: ஓமிக்­ரான் என்ற உரு­மா­றிய கொரோனா கிருமி தொடர்ந்து மர­பணு மாற்­றம் அடைந்து வரு­கிறது. தற்­போது பல்­வேறு நாடு­களில் ஓமிக்­ரான் எக்ஸ்.இ. என்ற புதிய வகை வைரஸ் பரவி வரு­கிறது.

மகா­ராஷ்­டிரா மற்­றும் குஜ­ராத்­தில் தலா ஒரு­வ­ருக்கு எக்ஸ்.இ. என்ற புதிய வகை கிருமி தொற்றி இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

இந்த நிலை­யில் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்­பாக மத்­திய அரசு நேற்று அவ­சர ஆலோ­சனை நடத்­தி­யது.

மத்­திய சுகா­தா­ரம் மற்­றும் குடும்ப நலத்­துறை அமைச்­சர் டாக்­டர் மன்­சுக் மாண்ட் வியா தலை­மை­யில் நடந்த இந்தக் கூட்­டத்­தில் உயர் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் கலந்­து­கொண்­ட­னர்.

உலக நாடு­களை அச்­சு­றுத்தி வரும் எக்ஸ்.இ. வகை கொரோனா கிருமி இந்­தி­யா­வில் பர­வா­மல் தடுப்­பது பற்­றி­யும், அப்­படி பர­வி­னால் அதை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது குறித்­தும் அந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­டது.

புதிய வகை 'எக்ஸ்இ' கிரு­மிப் பாதிப்­பின் தன்­மையை ஆய்வு செய்­யு­மா­றும் கண்­கா­ணிப்பை தீவி­ரப்­ப­டுத்­து­மா­றும் சுகா­தார அமைச்­சர் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

மேலும், தகுதி உள்ள அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடு­வ­தைத் துரி­தப்­ப­டுத்­த­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

நாடு முழு­தும் கொரோனா தொற்று குறைந்த போதி­லும் குஜ­ராத், ஹரி­யானா ஆகிய மாநி­லங்­க­ளி­லும் டெல்­லி­யி­லும் தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரித்­துள்­ளது.

குஜ­ராத்­தில் கடந்த மூன்று நாட்­களில் மட்­டும் 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­டுள்­ளது. ஹரி­யா­னா­வில் கடந்த ஒரு வாரத்­தில் 514 பேரும், டெல்­லி­யில் கடந்த ஒரு வாரத்­தில் 943 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.