போயிங் 737 மேக்ஸ் விமானம்; 90 விமானிகளுக்குத் தடை

போயிங் 737 மேக்ஸ் விமானம்; 90 விமானிகளுக்குத் தடை

2 mins read
ebe128f6-9116-40e7-81f9-a611a9afd540
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் போயிங் 737 மேக்ஸ் விமா­னத்தை ஓட்ட 90 விமா­னி­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­த­கைய விமா­னத்தை ஓட்டு­ வ­தற்­காக அளிக்­கப்­படும் பாவ­னைப் பயிற்சி இயந்­தி­ரத்­தில் கோளாறு ஏற்­பட்­ட­தால் அவர்­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய விமா­னப் போக்­குவ­ரத்து ஒழுங்கு­ முறை ஆணை­யம் (டிஜி­சிஏ) தெரி­வித்­தது.

விமா­னி­கள் அனை­வ­ரும் ஸ்பைஸ்­ஜெட் விமான நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

பாவ­னைப் பயிற்­சி­யில் சில குறை­பா­டு­கள் இருந்­தது வழக்­க­மான சோத­னை­யில் கண்டுபிடிக்கப் பட்டு இது குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் டிஜி­சிஏ எனும் ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின் தலை­வர் அருண் குமார் தெரி­வித்­தார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் தக­வல் அறிந்­த­வர்­கள் விமா­னக் கட்­டுப்­பாட்டு முறை­யில் கோளாறு இருந்­ததையும் இந்­திய ஆணை­யம் கண்­டு­பி­டித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால் இத­னால் பாதிப்பு இல்லை என்று ஸ்பைஸ் ஜெட் நிறு­வ­னம் கூறி­யது.

தங்­க­ளி­டம் போதிய விமா­னி­கள் இருப்­ப­தால் பெரிய அள­வில் பாதிப்பு ஏற்­ப­டாது என்று அந்­நி­று ­வ­னத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறியுள்ளார்.

"ஸ்பைஸ் ஜெட்­டின் 90 விமா­னி ­கள் மட்டும் மேக்ஸ் விமா­னங்­களை ஓட்ட டிஜி­சிஏ தடை விதித்­துள்­ளது. அந்த 90 விமா­னி­க­ளுக்­குப் மீண்­டும் பயிற்சி அளிக்க உத்­த­ர­வி­டப்­பட்டு உள்ளது," என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.

"இந்தத் தடை உத்­த­ரவு மேக்ஸ் விமா­னத்­தின் செயல்­பா­டு­களை பாதிக்­காது. ஸ்பைஸ் ஜெட் 11 மேக்ஸ் விமா­னங்­களை இயக்­கு­கிறது. "இந்த விமா­னங்­களை இயக்குவ­தற்கு சுமார் 144 விமா­னி­கள் தேவைப்­ப­டு­கின்­ற­னர்.

"மேக்­ஸில் பயிற்சி பெற்ற 650 விமா­னி­களில் 560 பேர் தொடர்ந்து பணி­யில் உள்­ள­னர்.

"இது தற்­போ­தைய தேவை­யை­விட அதி­கம்," என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்து உள்ளார்.