கர்நாடகா அமைச்சருக்கு சிக்கல்

கர்நாடகா அமைச்சருக்கு சிக்கல்

1 mins read
4a084176-f2a6-4159-b7d4-4f2752b91b9f
சந்தோஷ் பாட்டீல், அமைச்சர் ஈஷ்வரப்பா. படங்கள்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

ெபங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் ஒப்­பந்ததாரர் தற்­கொலை செய்­து­கொண்ட விவ­கா­ரத்­தில் அமைச்­சர் ஈஷ்­வ­ரப்பா மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு உள்­ளது. தற்­கொ­லைக்குத் தூண்­டியதாக இரு பிரிவு­ களில் அவர் மீது வழக்­குப் போடப்­பட்­டுள்­ளது.

அவ­ரது உதவியாளர்­கள் பச­வ­ராஜ், ரமேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

பெல்­காம் மாவட்­டம் இன்­டல்கா பகு­தியைச் சேர்ந்த ஒப்­பந்­த­தா­ர­ரான சந்­தோஷ் பாட்­டீல், அமைச்­சர் ஈஷ் ­வ­ரப்பா தன்­னி­டம் 40 விழுக்­காடு படித்­தொகை கேட்­ப­தாக புகார் கூறியிருந்­தார்.

இந்த நிலை­யில் ஒப்­பந்­த­தா­ரர் சந்­தோஷ் பாட்­டீல் மர்­ம­மான முறை­யில் இறந்து கிடந்­தார். அவர் வி‌ஷம் குடித்து தற்­கொலை செய்து கொண்­டது முதற்­கட்ட விசா­ரணை யில் தெரிய வரு­கிறது. அது மட்டு மல்­லா­மல் தனது தற்­கொ­லைக்கு அமைச்­சர் ஈஷ்­வ­ரப்­பா­தான் கார­ணம் என்று அவர் கடி­தம் எழுதி வைத்துள்ளார்.

இதை­ய­டுத்து சந்­தோஷ் தற்­கொலை தொடர்­பாக அமைச்­சர் ஈஷ்­வ­ரப்பா மீது காவல்­து­றை­யி­னர் வழக்­குப் பதிவு செய்­துள்­ள­னர்.

இத­னால் ஈஸ்­வ­ரப்­பா­வின் பதவி பறி­போ­க­லாம் என கூறப்­ப­டு­கிறது.

அவரே பத­வி­யி­லி­ருந்து எந்த நேரத்­தி­லும் வில­க­லாம் என­வும் தக­வல் அறிந்த வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இது குறித்து பேச தன்­னைச் சந்­திக்க வரு­மாறு கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை அவ­ருக்கு உத்தரவிட்டுள்ளார்.