புதுடெல்லி: சசிகலா தலைமை யிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு ரூபாய் 50 லஞ்சம் வழங்க முயற்சி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் டி.டி.வி. தினகரனிடம் மீண்டும் விசாரணை நடந்துள்ளது.
செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் முன்னிலையாகி அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "சுகேஷ் சந்திரேகர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி வாக்கு மூலம் அளித்து வருகிறார். என்னை சிக்க வைப்பதற்காக அவர் மாற்றி மாற்றி சொல்கிறார் என நினைக்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை," என்றார்.

