தமிழணங்கு சிற்பம்: புதுச்சேரி பள்ளி மாணவருக்கு பாராட்டு, பரிசு

புதுச்­சேரி: எழுத்­தா­ள­ரும் ஓவி­ய­ரு­மான சந்­தோஷ் நாரா­ய­ணன் 2019ஆம் ஆண்டு வரைந்த தமி­ழ­ணங்கு ஓவி­யத்தை இசை அமைப்­பா­ளர் ஏ.ஆர்.ரகு­மான் தமது டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருந்­தார்.

இந்த ஓவி­யத்தை புதுச்

சேரி­யைச் சேர்ந்த முத்­த­மிழ்­செல்­வன் என்­னும் மாண­வர், இலை, மூங்­கில் உள்­ளிட்ட பொருட்­க­ளைக் கொண்டு சிற்­ப­மாக வடி­வ­மைத்­துள்­ளார்.

புதுச்­சேரி பாகூர் பார­தி­யார் ஆண்­கள் அரசு மேல்­நி­லைப்­பள்­ளி­யில் 11ஆம் வகுப்பு படிக்­கும் முத்­த­மிழ் செல்­வ­னின் திற­மை­யைப் பல­ரும் பாராட்டி வரு­கின்­ற­னர்.

குறிப்­பாக, புதுச்­சேரி முதல்­வர் ரங்­க­சா­மி­யும் துணை­நிலை ஆளு­நர் தமி­ழி­சை­யும் முத்­த­மிழ்­செல்­வ­னைப் புகழ்ந்­த­னர். மேலும் அந்த மாண­வ­ருக்­குப் பாராட்­டுக் கிண்­ணம் ஒன்றை முதல்­வர் ரங்­க­சாமி பரி­சாக அளித்­தார்.

மாண­வ­ரின் தமி­ழ­ணங்கு சிற்­பம் சமூக ஊட­கங்­களில் வேக­மா­கப் பரவி வரு­கிறது.

ஓவி­யர் சந்­தோஷ் நாராய ணன் புது­மை­யான ஓவி­யங்­களை வரை­யக் கூடி­ய­வர்.

அவர் வரைந்த ஓவி­யத்­தில் திரிந்த சடை, கயல் விழி

­க­ளு­டன் வெள்­ளை­நிற சேலை­யில் ழகர வேலை ஏந்தி கறுப்பு நிறத்­தில் காட்­சி­ய­ளிக்­கி­றார் தமிழ்த்­தாய்.

அண்­மை­யில் வெளி­யான 'ரைட்­டர்' என்­னும் தமிழ்த் திரைப்படத்­தின் விளம்­ப­ரத் தையும் வித்­தி­யா­ச­மான முறை­யில் வரைந்­தி­ருந்­தார் சந்­தோஷ் நாரா­ய­ணன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!