புதுடெல்லி: பணவீக்கம், வேலையின்மை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்பாக ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்க சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுமாறு மத்திய அமைச்சர்கள் உள்பட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி, ஒடிசா, உத்தரப் பிரதேசம், அரியானா மாநிலங்களின் பாஜக எம்.பி.க்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில்
மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைக்குமாறு அவர்
அறிவுறுத்தினார்.

