ரசாயன ஆலையில் வெடிப்பு: 6 பேர் பலி

ரசாயன ஆலையில் வெடிப்பு: 6 பேர் பலி

2 mins read
63c757ef-1688-4214-9607-54a4af5cb669
-

ஹைதராபாத்: ஆந்­திர மாநி­லத்­தின் ரசா­ய­னத் தொழிற்­சா­லை­யில் அணு உலை வெடித்து தீப்­பி­டித்­த­தில் ஆறு பேர் உயி­ரி­ழந்­த­னர். 14 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

அந்த மாநி­லத்­தின் ஏலுரு மாவட்­டத்­தி­லுள்ள அக்­கி­ரெட்­டி­

கூ­டம் என்ற பகு­தி­யில் வேதிப் பொருள்­கள் தயா­ரிக்­கும் தொழிற்­சாலை ஒன்று உள்­ளது. அங்கு நேற்று முன்­தி­னம் இரவு வழக்­கம்­போல் ஊழி­யர்­கள் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

அப்­போது, தொழிற்­சா­லை­யின் நான்­கா­வது யூனிட்­டில் திடீ­ரென அணு உலை வெடித்து தீப்­பற்­றி­யது. இத­னால், அந்த யூனிட் முழு­வ­தும் தீப்­பற்றி எரிந்­தது. சுற்­றி­லும் தீப்­பி­டித்து மள­ம­ள­வென பர­வி­ய­தால் தொழி­லா­ளர்­கள் அங்­கி­ருந்து தப்­பித்து ஓட முயன்­ற­னர். அவர்­களில் ஆறு பேர் தீயில் சிக்கி கருகி மாண்­ட­னர்.

போருஸ் லேபா­ரட்­ட­ரீஸ் என்­னும் அந்த தொழிற்­சா­லை­யில் சம்­ப­வம் நிகழ்ந்­த­போது 20 பேர் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­தாக காவல்­துறை துணை கண்­கா­ணிப்­பா­ளர் ஸ்ரீனி­வா­சலு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார். படு­கா­ய­ம­டைந்த 14 பேரில் பல­ரது நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். இத­னால் உயி­ரி­ழப்பு அதி­க­ரிக்­கக்­கூ­டும் என அஞ்­சப்­

ப­டு­கிறது.

அணு உலை வெடித்­த­தற்கு வாயு கசிவு கார­ண­மாக இருக்­க­லாம் என முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரு வதாகவும் அவர் தெரிவித்தார்.

நள்­ளி­ரவு நேரத்­தில் சம்­ப­வம் நிகழ்ந்த உடன் தீய­ணைப்­புப் படை­யி­னர், காவல்­து­றை­யி­னர், தேசிய பேரி­டர் மீட்­புப் படை­யி­னர் அந்த இடத்­திற்கு விரைந்­த­னர். ஊழி­யர்­க­ளைக் காப்­பாற்ற அவர்­கள் முயன்­ற­னர். வாயு கசிவு ஏற்­பட்­ட­தால் அரு­கி­லி­ருந்த கிராம மக்­களை அவர்­க­ளின் இருப்­பி­டத்­திலி­ருந்து அதி­கா­ரி­கள் வெளி­யேற்­றி­னர்.

உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு தலா ரூ.25 லட்­சம் இழப்­பீ­டும் படு­கா­ய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு ரூ.5 லட்­சம் நிவா­ர­ண­மும் வழங்­கப்­படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறி­வித்­துள்­ளார்.