பாலியல் மிரட்டல்: சாமியார் கைது

பாலியல் மிரட்டல்: சாமியார் கைது

1 mins read
a01e8008-3253-4ac3-8727-006459a38b2f
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் சீதாப்­பூர் மாவட்­டத்­திலுள்ள மக­ரிஷி ஸ்ரீலக்ஷ்மண் தாஸ் ஆசி­ர­மத்­தின் தலை­வ­ராக இருப்­ப­வர் பஜ்­ரங் முனி தாஸ் (படம்). சாமி­யா­ரான இவர், இம்­மா­தம் 2ஆம் தேதி சீதாப்­பூர் சுற்­று­வட்­டா­ரத்தில் ஜீப்­பில் சென்று சம­யப் பிர­சா­ரம் செய்­தார். சீதாப்­பூர் பள்­ளி­வா­சல் அருகே சென்­ற­போது, முஸ்லிம் பெண்களுக்கு எதிராக அவர் பாலியல் மிரட்டல் விடுத்தார். அதனால் அங்கு ஒரு­வி­த­மான பதற்­றம் எழுந்­தது.

அவ­ரது இந்த வெறுப்­புப் பேச்சு குறித்து காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டது. தேசிய பெண்­கள் ஆணை­யம் பஜ்­ரங் முனி தாஸின் பேச்­சுக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­து­டன், அவரை உட­ன­டி­யாக கைது செய்யவேண்­டும் என வலி­யு­றுத்­தி­யது. இதன் தொடர்ச்­சி­யாக, அவர் மீது பல்­வேறு பிரி­வு­களின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்­து­றை­யி­னர் 11 நாட்­க­ளுக்­குப் பிறகு நேற்று முன்­தி­னம் இரவு அவரை கைது செய்­த­னர்.