மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் 'மானிட்டர் லிஸார்ட்' எனப்படும் ராட்சத பல்லியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நால்வர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மகாராஷ்டிராவிலுள்ள கோதேன் கிராமம் அருகே சஹிதாரி புலிகள் காப்பகம் உள்ளது. இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமான வகையில் நான்கு பேர் சுற்றித் திரிவதை கண்காணிப்பு கேமரா மூலம் வனத் துறையினர் கண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களி டம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அனை வரும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சில வாரங்களுக்கு முன்னர் இதே பகுதியில், வங்காள ராட்சத பல்லி ஒன்றை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தது அவர்களின் கைபேசி காணொளியில் பதிவாகி இருந்தது.
விசாரணையின் ஒரு பகுதியாக கைபேசியை அதிகாரிகள் சோதித்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது. உடனடியாக நான்கு பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
சந்தீப் துக்ராம், பவார் மங்கேஷ், ஜனார்தன் காம்டேகர் மற்றும் அக்சய் சுனில் ஆகியோர் அந்த நால்வர் என்றும் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர். வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ், அரிய வகை உயிரினமாக வங்காள ராட்சத பல்லிகள் கருதப்படுகின்றன. இதனை துன்புறுத்துவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

