பஞ்சாப் முன்னாள் முதல்வரிடம் அமலாக்கத்துறை விசாரணை

சண்­டி­கர்: பஞ்­சாப் மாநி­லத்­தில் சட்­ட­வி­ரோ­த­மாக மணல் குவாரி தொடர்­பான வழக்­கில் சிக்­கி­யுள்ள முன்­னாள் முதல்­வர் சரண்­ஜித் சிங்கி­டம் மத்­திய அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்­தி­யது.

இத­னால் காங்­கி­ரஸ் கட்சி வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பு நில­வு­கிறது. தேர்­த­லில் படு­தோல்வி கண்­டுள்ள நிலை­யில், இந்த விசா­ர­ணைப் படலம் சரண்­ஜித் சிங்­குக்கு கடும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாகத் தெரி­கிறது.

அண்­மை­யில் நடை­பெற்ற சட்டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்கு முன்பு அப்­போ­தைய முதல்­வர் சரண்­ஜித் சிங்­கின் உற­வி­ன­ரான பூபிந்­தர் சிங் வீட்­டில் அம­லாக்கத்­து­றை அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­போது ரொக்­க­மாக ரூ.10 கோடி கைப்­பற்­றப்­பட்­டது.

அதை­ய­டுத்து நடை­பெற்ற விசா­ரணை­யின்­போது, அது சட்­ட­விரோத மணல் குவாரி நடத்­து­ப­வர்­கள் லஞ்­ச­மாக கொடுத்த பணம் என்பது தெரிய வந்­தது. இதை­யடுத்து அமலாக்கத்துறை அவரைக் கைது செய்தது.

இத­னால் மணல்­கு­வாரி முறை­கேட்­டில் சரண்­ஜித் சிங்­குக்­கும் தொடர்பு உள்­ள­தாக சில தரப்­பி­னர் குரல் எழுப்­பி­னர். இதை­ய­டுத்து அவ­ரைக் கைது செய்ய வேண்டும் என்­றும் அவர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், ஜலந்­த­ரில் உள்ள அம­லாக்­கத்­துறை மண்­டல அலு­வ­ல­கத்­தில் சரண்­ஜித் சிங் நேற்று முன்­தி­னம் மாலை முன்­னி­லை­யா­னார்.

அப்­போது அவ­ரி­டம் அதி­கா­ரி­கள் ­ஆறு மணி நேரம் விசா­ரணை நடத்­தி­ய­தா­க­வும் பல்­வேறு கிடுக்­கிப்­பிடி கேள்­வி­கள் கேட்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­கிறது.

எனி­னும் விசா­ர­ணக்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், அதி­கா­ரி­கள் தம்­மி­டம் எழுப்­பிய அனைத்து கேள்­வி­க­ளுக்­கும் தமக்­குத் தெரிந்­த­வரை பதில்­களை அளித்­த­தா­க­வும் மீண்­டும் விசா­ரணைக்கு வர வேண்­டும் என்­பது குறித்து தக­வல் ஏதும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­வித்­தார்.

இந்த விசா­ரணை குறித்து கருத்து தெரி­வித்த பஞ்­சாப் மாநில காங்­கி­ர­சின் முன்­னாள் தலை­வர் நவ்­ஜோத் சிங் சித்து, நிலம், மண், மது மாஃபியா நடத்­தி­ய­வர்­கள் அர­சாங்­கத்­தின் கஜானாவை காலி செய்­து­விட்­ட­தா­க­வும் அவர்­க­ளுடனான தனது மோதல் இப்­போ­தைக்கு நிற்­காது என்­றும் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!