நாட்டின் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். நாட்டின் முன்னேற்றத்துக்காக பிரதமர் ஆற்றிய பல்வேறு பணிகள் குறித்து நாட்டு மக்கள் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும் என்று அவர் கூறினார். இதில் நாட்டின் வரலாற்றை எடுத்துக்கூறும் புகைப்படங்கள், ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக அருங்காட்சியகத்துக்கு செல்வதற்கான முதல் அனுமதிச் சீட்டை பிரதமர் மோடி வாங்கினார். பின்னர் காணொளிகள் சிலவற்றை சிறப்பு ஏற்பாடு மூலம் அவர் பார்த்து ரசித்தார். படம்: பிஐபி
பிரதமர்கள் பெருமை பேசும் அருங்காட்சியகம்
1 mins read
-

