டெல்லி வன்முறை: பலர் கைது

டெல்லி வன்முறை: பலர் கைது

1 mins read
4185669a-93cf-4c4c-9f34-9ea01be88d82
ஜஹாங்கிர்புரியில் குவிக்கப்பட்டுள்ள கலவரத் தடுப்புப் படை. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: தலை­ந­கர் டெல்­லி­யில் அனு­மன் ஜெயந்தி நிகழ்ச்­சி­யின்­போது இரு­த­ரப்­பி­னர் இடையே வன்­முறை வெடித்து பதற்­றம் அதி­க­ரித்­ததைத் தொடர்ந்து காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். டெல்­லி­ ஜஹாங்­கிர்­புரி பகு­தி­ யில் சனிக்­கி­ழமை இரவு இந்­தச் சம்­ப­வம் நடந்­தது. சாலை­யின் இரு புறத்­தி­லும் இரு­த­ரப்­பி­னர் நின்­று­கொண்டு கற்­களை வீசு­வ­து­போன்ற காட்­சி­கள் வெளி­யாகி பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இரு­த­ரப்­பி­ன­ரை­யும் காவல்­து­றை­யி­னர் சமா­தா­னப்­ப­டுத்­தி­னர்.

இது தொடர்­பாக செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய டெல்லி காவல்­துறை ஆணை­யர் ராகேஷ் அஸ்­தானா, "நிலை­மையை உன்­னிப்­பாகக் கண்­கா­ணித்து வரு­கி­றோம். பதற்­றம் நிறைந்த பகு­தி­யில் கூடு­தல் காவல்­து­றை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ளனர். கல­வ­ரத் தடுப்புப் படை­யி­ன­ரும் போது­மான அளவு குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். சம்­ப­வத்­தின்­போது காவ­லர்­

க­ளுக்குக் காயம் ஏற்­பட்­டுள்­ளது. என்ன நடந்­தது என்­பது குறித்து விசா­ரணை நடத்தி வரு­கி­றோம்," என்று தெரி­வித்­தார்.

இந்த மோதல் குறி­த்து டெல்லி காவல்­துறை ஆணை­யர் உள்­பட உயர் அதி­கா­ரி­க­ளு­டன் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா ஆலோ­சனை நடத்­தி­னார். தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு அவர் உத்­த­ர­விட்­டார். வன்­முறை குறித்து விசா­ரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்க உத்­த­ர­வி­டப் பட்­டுள்­ள­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், வன்­முறை தொடர்­பாக சனிக்­கி­ழமை இரவு 9 பேரும் நேற்று காலை 5 பேரும் என 14 பேரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.