பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை பின்னிரவு வன்முறை வெடித்தது. இதன் தொடர்பில் 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஹூப்ளி பகுதியில் உள்ள ஆனந்த் நகரைச் சேர்ந்த அபிஷேக் ஹயர்மத் என்பவர் சமூக ஊடகங்களில், சமய சர்ச்சைையக் கிளப்பும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
இப்பதிவு பரவியதைத் தொடர்ந்து ஹயர்மத் கைது செய்யப்பட்டார். எனினும், அவரைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு நூற்றுக்கணக் கானோர் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். அங்கு வன்முறை வெடித்தது. காவல் நிலையம், வாகனங்கள், மருத்துவமனை மீது பெரிய கற்களை வீசினர். பழைய ஹூப்ளி காவல் நிலை யம் முன்பு பதற்றமான சூழல் நிலவியது. இதன்பிறகு, அங்கி ருந்த 40 பேரையும் காவல் துறை யினர் கைது செய்தனர்.

