புயல், மழைக்கு 14 பேர் பலி

புயல், மழைக்கு 14 பேர் பலி

1 mins read
690e9288-77ce-49a0-b0e3-b1d7a03f58ab
-

கௌகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 592 கிராமங்களில் 20,000க்்கும் மேற்பட்ட மக்கள் கடந்த சில நாட்களாக கடுமையான புயலுடன் கூடிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயலில் சிக்கி இதுவரை 14 பேர் மாண்டுவிட்டனர். இவர்களில் எட்டு பேர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது.