செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0711d6be-8d0b-46e3-a7c5-4f057f6101f3
-

வெப்பத்தைத் தாங்கும் தடுப்பூசி

பெங்களூரு: கா்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள 'மைன்வாக்ஸ்' ஆய்வகம் குளிா்சாதனப் பெட்டி அல்லது குளிா்பதன வசதி மூலம் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், புதிய கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகிறது. பிற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில், இந்தத் தடுப்பூசி தனித்துவம் வாய்ந்தது. இதனை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4 வாரங் களுக்கும் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒன்றரை மணிநேரம் வரையும் வைத்திருக்க முடியும். நடப்பில் உள்ள ஃபைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனம் கவிழ்ந்து ஐவர் மரணம்

கௌகாத்தி: அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பிஹூ நடனக்குழுவினர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. நடன நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்பியபோது கோபூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. இதில், ஐவர் உயிரிழந்தனர். மேலும் ஐவர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதையடுத்து வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வரு கின்றனர்.

பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை

புதுடெல்லி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக வரும் 21ஆம் தேதி இந்தியா வர உள்ளார். கடந்த ஆண்டில் இரு முறையும் இவ்வாண்டு ஜனவரியிலும் பிரதமர் ஜான்சன் இந்தியா வரத் திட்டமிட்டி ருந்தார். ஆனால், மூன்று முறையும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

ஆளுநர் தமிழிசை மாற்றப்படலாம்

ஹைதராபாத்: தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் (படம்) 2019 செப்டம்பர் 1 முதல் தெலுங்கானா மாநில ஆளுநராக இருந்து வருகிறார். 2021 பிப்ரவரி முதல் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் அவர் நியமிக்கப் பட்டார். கடந்த சில மாதங்களாக தெலுங்கானா மாநில அரசுக்கும் தமிழிசைக்கும் இடையில் கருத்துவேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில் அவர் நேற்றுக் காலை திடீரென்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். கேரள மாநில ஆளுநராகவோ புதுச்சேரியின் முழுநேர துணை நிலை ஆளுநராகவோ அவர் நியமிக்கப்பட லாம் என்ற கருத்து பரவி வருகிறது. கேரள ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டால் தற்போதைய கேரள ஆளுநர் ஆரிஃப் அகமதுகான் தெலுங்கானாவுக்கு மாற்றப்படலாம்.