காஷ்மீர் தீவிரவாதிகளிடம் செயற்கைக்கோள் தொலைபேசி: உளவுத்துறை எச்சரிக்கை

காஷ்மீர் தீவிரவாதிகளிடம் செயற்கைக்கோள் தொலைபேசி: உளவுத்துறை எச்சரிக்கை

2 mins read
e2b2c641-b72f-4094-8064-d19ea01dc59e
-

புது­டெல்லி: ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து வெளி­யே­றி­ய­போது அமெ­ரிக்­கப் படை­கள் விட்­டுச்சென்ற செயற்­கைக்­கோள் தொலை­பேசி உள்­ளிட்ட நவீன கரு­வி­கள் தற்போது காஷ்­மீர் தீவி­ர­வா­தி­கள் வசம் சென்­று­விட்­ட­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

காஷ்­மீர் எல்­லைப் பகு­தி­கள் வழியே இந்­தி­யா­வுக்­குள் ஊடு­ரு­வு­வது தீவி­ர­வா­தி­க­ளின் வழக்­க­மாக இருந்து வரு­கிறது.

அந்த வகை­யில் நூற்­றுக்­க­ணக்­கான தீவி­ர­வா­தி­கள் எந்த நேரத்­தி­லும் பாகிஸ்­தா­னில் இருந்து காஷ்­மீருக்­குள் ஊடு­ருவ வாய்ப்­புள்­ள­தாக அண்­மைய சில வாரங்­க­ளாக மத்­திய உள­வுத்துறை தொடர்ந்து மத்­திய அரசை எச்சரித்து வருகிறது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் தடை செய்­யப்­பட்­டுள்ள செயற்கைக்­கோள் தொலை­பே­சி­கள், தெர்­மல் இமேஜ் உள்­ளிட்ட நவீன கரு­வி­கள் காஷ்­மீர் எல்­லைப் பகு­தி­களில் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தற்­கான சிக்­னல்­கள் அடிக்­கடி பதி­வாகி வரு­கின்­றன.

சில மாதங்­க­ளுக்கு முன்­பு­வரை வடக்கு காஷ்­மீ­ரில் மட்­டுமே இவ்­வாறு பதி­வாகி வந்த நிலை­யில், தற்­போது தெற்கு காஷ்­மீ­ரி­லும் பதி­வாகி உள்­ள­தாக பாது­காப்­புப் படை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இரி­டி­யம் செயற்­கைக்­கோள் தொலை­பே­சி­களை ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்­த­போது அமெ­ரிக்­கக் கூட்­டுப் படை­யி­னர் பயன்படுத்­தி­னர். அவர்­கள் அங்­கி­ருந்து வெளியே­றி­ய­போது ஏரா­ள­மான செயற்­கைக்­கோள் தொலை­பே­சி­களை அப்­ப­டியே விட்­டுச்சென்ற­தாகக் கூறப்­ப­டு­கிறது. தலி­பான்­களும் இதர தீவி­ர­வாத அமைப்­பு­களும் அவற்­றைக் கைப்­பற்றி, இப்­போது பயன்­ப­டுத்தி வரு­வ­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை தீவி­ர­வாத சம்­ப­வத்­துக்குப் பிறகு இந்­தி­யா­வில் இரி­டி­யம் செயற்­கைக்­கோள் கைபே­சி­க­ளுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இவற்றை வெளி­நாட்­டி­ல் இருந்து கொண்டு வர­வும் கடு­மை­யான கட்­டுப்­பாடுகள் உள்­ளன.

இந்­நி­லை­யில், காஷ்­மீர் எல்லைப் பகு­தி­களில் இவை பயன்­ப­டுத்­தப்­படு­வது தெரி­ய­வந்­ததை அடுத்து, மத்­திய அரசு சில அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

இதற்­கி­டையே, லடாக் எல்லைப் பகுதி அருகே சீனா மூன்று கைபேசி கோபு­ரங்­களை நிறுவியுள்ளது.

இதே­போல் மேலும் சில கோபு­ரங்­களை நிறு­வுவ­தற்­கான நட­வடிக்கை­களை சீன ராணு­வம் மேற்­கொள்ள இருப்­ப­தாக வெளி­யான தக­வல் இந்­தி­ய தரப்­புக்கு அதிர்ச்­சி­யை­யும் கோபத்­தை­யும் ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்­திய எல்­லைக்கு மிக அருகே சீனா இரட்டை பயன்­பாட்டு கட்­டு­மா­னங்­களை மேற்­கொண்டு வருவதாக அமெ­ரிக்கா அண்­மை­யில் கூறி­யி­ருந்­தது.

அதை உறுதி செய்­யும் வகையில் சீனா­வின் நட­வ­டிக்­கை­கள் அமைந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.