அரசியல் கொலைகள்: பாலக்காட்டில் 144 தடை உத்தரவு

அரசியல் கொலைகள்: பாலக்காட்டில் 144 தடை உத்தரவு

1 mins read
9479e292-dfb4-4129-b352-80ee14fbda0c
-

திருவனந்தபுரம்: கேரள மாநி­லம் பாலக்­காடு மாவட்­டத்­தில் கடந்த சில தினங்­க­ளாக அடுத்­த­டுத்து நிகழ்ந்­துள்ள படு­கொ­லைச் சம்­ப­வங்­க­ளால் அங்கு பதற்­றம் நிலவி வரு­கிறது. இத­னால் அம்­மா­வட்­டத்­தில் 144 தடை உத்­த­ரவு போடப்­பட்­டுள்­ளது.

அங்கு கடந்த 14ஆம் தேதி ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த 4 பேர் அதி­காலை வேளை­யில் தாக்­கப்­பட்­ட­னர். படு­கா­யம் அடைந்த நால்­வ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதை­ய­டுத்து மறு­நாளே கொழிஞ்­சாம்­பாறை பகு­தி­யில் எஸ்­டி­பிஐ கட்சி உறுப்­பி­னர் ஒருவர் கொல்­லப்­பட்­டார். அவர் தன் தந்தை­யின் கண்­முன்னே வெட்­டிக் கொல்­லப்­பட்ட சம்­ப­வம் கேரள மக்­களை கடும் அதிர்ச்­சி­யில் ஆழ்த்தி உள்­ளது.

இந்­நி­லை­யில் அடுத்த சம்­ப­வ­மாக பாலக்­காடு நகர்ப்­ப­கு­தி­யில் உள்ள கடை­யில் வேலை பார்த்து வந்த ஆட­வர் கொல்­லப்­பட்­டுள்­ளார். இவற்றை அர­சி­யல் படு­கொலை­கள் என கேரள ஊட­கங்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.

இத­னால் மக்­கள் மத்­தி­யில் பதற்­றம் அதி­க­ரித்­ததை அடுத்து பாலக்­காடு மாவட்­டம் முழு­வ­தும் 144 தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. அங்கு நூற்­றுக்­க­ணக்­கான காவல்­து­றை­யி­னர் தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

ஒட்­டு­மொத்த மாவட்­ட­மும் காவல்­து­றை­யின் பாது­காப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே இரண்டு பேர் அடுத்­த­டுத்து கொல்­லப்­பட்ட சம்­ப­வங்­களில் தொடர்­பு­டைய கொலை­யா­ளி­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தாக கேரள காவல்­துறை துணைத்­த­லை­வர் தெரி­வித்­துள்­ளார்.

கொலை­யா­ளி­களைப் பிடிப்­ப­தற்கு ஐந்து தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மிக விரை­வில் அவர்­கள் கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.