புதுடெல்லி: உக்ரேனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தங்களுடைய கல்வியைத் தொடர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர்.
மருத்துவம் உட்பட பல்வேறு துறை சார்ந்த தங்களின் கல்வி பாதியில் நின்றுபோனதால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக மாணவர்களும் அவர்களுடைய பெற்றோரும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

