டெல்லி வன்முறை: 25 பேர் கைது

டெல்லி வன்முறை: 25 பேர் கைது

1 mins read
2481e11d-ca63-48c8-b34c-824f8d662205
-

புதுடெல்லி: அண்மை யில் டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது அதில் பங்கேற்றவர்களை நோக்கி சோனு ஷேக் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து நவீன கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

சோனு ஷேக், துப்பாக்கியால் சுடும் காட்சி அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 25 பேர் கைதாகி உள்ளனர்.

கடந்த 16ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.

கைதான ஒருவர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது கண்ணாடிப் புட்டிகளை வீசி எறிந்துள்ளார். மேலும், தன்னுடன் இருந்த சிலருக்கு அந்தப் புட்டிகளை வழங்கியதாகவும் விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சிலர் தேடப்பட்டு வருகிறார்கள்.