மத்திய அரசு: பணவீக்கம் 14.55%; மின்னிலக்க பணத்தை ஊக்குவிக்க விரும்பவில்லை

மத்திய அரசு: பணவீக்கம் 14.55%; மின்னிலக்க பணத்தை ஊக்குவிக்க விரும்பவில்லை

2 mins read
7ad43ccd-27a8-44db-bb75-bbeffcadafc3
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் மொத்த பண­வீக்­க­மா­னது 14.55% ஆக உயர்ந்­துள்­ளது. எனி­னும், மக்­கள் இது­கு­றித்து கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

விலை­வாசி உயர்வு, பெட்­ரோ­லிய பொருள்­க­ளின் விலை உயர்வு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் வரு­டாந்­திர மொத்த விலை அடிப்­ப­டை­யி­லான பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்­ள­தாக மத்­திய அரசு விளக்­கம் அளித்­துள்­ளது.

என­வே­தான், கடந்த நான்கு மாதங்­களில் மட்­டும் இது­வரை இல்­லாத அள­வாக, மார்ச் மாத இறு­தி­யில் பணவீக்­கம் 14.55% ஆக உயர்ந்­துள்­ளது. கடந்த சில மாதங்­க­ளாக எரி­பொ­ருள், மின்­சா­ரம் ஆகி­ய­வற்­றின் தேவை அதி­க­ரித்­துள்­ளதை அரசு சுட்­டிக்­காட்டி உள்­ளது.

அண்­மை­யில்­தான் கடந்த 17 மாதங்­களில் இல்­லாத அள­வுக்கு சில்­லறை பண­வீக்­கம் உச்­சம் தொட்­டது. இதன் கார­ண­மாக நாட்­டின் ஒட்­டு­மொத்த பண வீக்­க­மா­னது தொடர்ந்து 12ஆவது மாத­மாக உயர்ந்­துள்­ளது. கடந்த பிப்­ர­வ­ரி­யில் மொத்த பண­வீக்க விகி­தம் 13.11% ஆக இருந்­தது.

மின்­னி­லக்க பணத்தை ஊக்­கு­விக்க விரும்­ப­வில்லை

மின்­னி­லக்க பணம் எனப்­படும் கிரிப்டோ கரன்­சியை ஊக்­கு­விக்க இந்­தியா விரும்­ப­வில்லை என்று மத்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் தெரி­வித்­துள்­ளார்.

அமெ­ரிக்­கா­வில் நடை­பெற்ற மாநாட்­டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய அவர், மின்­னி­லக்க பணம் என்­பது பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி சேர்­வ­தை­யும் கருப்­புப் பண புழக்­கத்­தை­யும் அதி­க­ரிக்­கச் செய்­யும் என்­றார்.

"எனவே நவீன தொழில்­நுட்­பம் கொண்டு கிரிப்­டோ­ க­ரன்­சியை முறைப்­ப­டுத்­து­வது என்பதே ஒரே தீர்வு. அந்­தத் தொழில்­நுட்­பம் அதிக சக்தி வாய்ந்­த­தாக இருக்க வேண்­டும். மேலும், உலக நாடு­கள் அனைத்­தும் ஒன்­றி­ணைந்து அந்­தத் தொழில்­நுட்­பத்தை உரு­வாக்க வேண்­டும். எந்த ஒரு நாடும் தனி­யாக இதை சாதித்­து­விட முடி­யாது," என்­றார் நிர்­மலா சீதா­ரா­மன்.

மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கு­த­லில் இந்­தியா தொடர்ந்து முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தா­கவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.