பாரம்பரிய மருந்துகளுக்கான மையத்துக்கு அடிக்கல்

அஹம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லத்­தில் உள்ள ஜாம்­ந­க­ரில் உலக சுகா­தார அமைப்­பின் பாரம்­ப­ரிய மருந்­து­க­ளுக்­கான அனைத்­து­லக மையத்­திற்கு நேற்று அடிக்­கல் நாட்­டப்­பட்­டது.

அந்த அமைப்­பின் தலை­வர் டெட்­ரோஸ் முன்­னி­லை­யில், பிர­த­மர் மோடி அடிக்­கல் நாட்­டி­ய­து­டன், அனைத்­து­லக புத்­தாக்க மாநாட்­டை­யும் தொடங்கி வைத்­தார்.

இது பாரம்­ப­ரிய மருந்­து­க­ளுக்­காக அமைக்­கப்­படும் உல­கின் முத­லா­வது மற்­றும் ஒரே அனைத்­து­லக மைய­மா­கும்.

250 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் முத­லீட்­டில் அறி­வி­யல், நவீன தொழில்­நுட்­பத்­தின் மூலம் பாரம்­ப­ரிய மருந்­து­க­ளின் திறனை அதி­க­ரிக்­கும் நோக்­கத்­தில் இந்த மையத்தை துவங்க முடிவு செய்­யப்­பட்­ட­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் முன்பு தெரி­வித்­தி­ருந்­தது.

நேற்­றைய விழா­வில் பேசிய டெட்­ரோஸ், குஜ­ராத்தி மொழி­யில் "அனை­வ­ரும் எப்­படி இருக்­கி­றீர்­கள்?" என விசா­ரித்­தார்.

மேலும், பாரம்­ப­ரிய மருத்­து­வத்­துக்கு இந்­தியா அளிக்­கும் ஆத­ர­வுக்கு அவர் நன்றி தெரி­வித்­தார்.

முன்­ன­தாக இந்­தியா வந்­தடைந்த தமக்கு இத­மான வர­வேற்பு அளிக்­கப்­பட்­ட­தற்­காக நன்றி தெரி­வித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருந்­தார் டெட்­ரோஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!